நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். ஒரு படத்துக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரை பற்றிய எந்த தகவல் வந்தாலும், அப்டேட் ஆனாலும் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் பார்த்து விடுகின்றனர். விஜய் என்றாலே, தீயாக ரசிகர்கள் மாறி விடுகின்றனர்.
துவக்கத்தில் சாதாரண நடிகராக தான் தன் சினிமா வாழ்க்கையை துவங்கினார் விஜய். அவரது முதல் படம் நாளைய தீர்ப்பு. அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தான் அந்த படத்தை டைரக்டர் செய்தார். ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை.
இதையடுத்து ரசிகன் படமும், விஜய்க்கு கை கொடுக்கவில்லை. ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தால்தான் தன் மகனுக்கு சிறப்பாக சினிமா எதிர்காலம் என்பதை உணர்ந்த எஸ்ஏ சந்திரசேகர், அப்போது முக்கிய நடிகராக பிஸியாக இருந்த கேப்டன் விஜய்காந்தை அணுகி இந்த விஷயத்தை சொன்னார்.
உடனே அதற்கேற்ப செந்தூரப்பாண்டி என்ற படத்தில், விஜயை தனக்கு தம்பியாக நடிக்க வைத்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பிறகு விஜயின் சினிமா வாழ்க்கை துளிர்க்க ஆரம்பித்தது. பின் படிப்படியாக முன்னேறி, முன்னணி ஹீரோவாக மாறினார்.
ஆனால், இப்போது அப்பா சந்திரசேகரும், மகன் விஜய் பல மாதங்களாக பேசிக்கொள்வது இல்லை. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, விஜய், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் சொல்லும் அறிவுரைகளை இடையூறாக நினைக்கிறார். ஆனால், அவரது நன்மைக்காக, வளர்ச்சிக்காக மட்டுமே அதை கூறுகிறேன். எந்த தந்தையும் தன் மகன் கெட்டுப் போகட்டும் என நினைக்க மாட்டார்.
விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார். மிகச்சிறிய வயதில் கேன்சர் நோயால் அவள் இறந்துவிட்டாள். அதனால், விஜயை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். கேன்சருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்ட வேண்டும். கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டராக விஜய் இருக்க வேண்டும். ஒரு குழந்தை கூட கேன்சர் நோயால் சாகாமல் விஜய் காப்பாற்ற வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதை பற்றி எல்லாம் யோசிக்காமல், விஜய் நடிகராக ஆசைப்பட்டார். அதையும் ஒரு தந்தையாக நான் நிறைவேற்றித் தந்தேன், என கூறி இருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.





