- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இராமாயணா படத்திற்காக 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கூறியிருக்கிறார். கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ஏஆர் ரகுமான் கூறுகையில், இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமாயணம் படத்தின் இசைப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். மேலும் இராவண தாண்டவம் இசைக்கோர்வை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு 13 முறை மாற்றி அமைக்கப்பட்டதாகவும் இந்த ஒரு படத்திற்காக மற்ற 12 பட வாய்ப்புகளை தவிர்த்ததில் பெருமை கொள்வதாகவும் அவர் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





