- Advertisement -
Homeபொழுதுபோக்குநெடுஞ்சாலை பட நாயகன் ஆரிக்கு என்னதான் ஆச்சு? அவருக்கு கதை சொல்லவே பயப்படும் தமிழ்...

நெடுஞ்சாலை பட நாயகன் ஆரிக்கு என்னதான் ஆச்சு? அவருக்கு கதை சொல்லவே பயப்படும் தமிழ் சினிமா இயக்குநர்கள் – நீங்க இப்படி பண்ணலாமா ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடிக்கும் சில நடிகர்கள் முதல் படத்திலயே ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றனர். அதற்கு பிறகு அவர்கள் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்த்தால், அது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் அளிக்கிறது. ஏனெனில் அந்த ஓரிரு படங்களுக்கு பின் அவர்கள் நடிக்காமல் காணாமல் போய் விடுகின்றனர்.

அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் ஆரி அர்ஜூனா. நெடுஞ்சாலை படத்தில், ஹைவே ரோட்டில் ஓடும் கனரக வாகனங்களில் இருந்து, லோடு செய்யப்பட்ட பொருட்களை திருடும் ஒரு வித்யாசமான கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார்.

- Advertisement -

ஆனால் அதற்கு பிறகு நாகேஷ் திரையரங்கம், மாயா உள்ளி்ட்ட படங்களில் நடித்த அவர், தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். ஆரி, முதலில் அறிமுகமான படம் ரெட்டச்சுழி என்றாலும், நெடுஞ்சாலை தான் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதற்கிடையே விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரி, டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். அதற்கு பிறகாவது அவர் நடிக்கும் படங்கள் வரும் என்று எதிர்பார்த்தால், அப்போதும் ரசிகர்களின் கனவு நிறைவேறவில்லை. நல்ல நடிகரான அவர், நடிக்காமல் போக அவர்தான் காரணம் என இப்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதாவது தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், கதையை அப்படி மாற்று, இப்படி மாற்று, இந்த சீனை அங்க வை, அந்த சீனை இங்க வை என பாடாய்படுத்தி, டார்ச்சர் செய்து இயக்குநரை அழாத குறையாத செய்துவிடுவதே ஆரியின் பழக்கம். அவரது சித்ரவதை தாங்க முடியாமல் விட்டால் போதும் சாமி, என கதை சொல்ல போன இயக்குநர்கள் சிலரும் தலைதெறிக்க தப்பி ஓடி வந்திருக்கின்றனர்.

இதற்கிடையே டைரக்டர் சேரன் இயக்கிய சேரனின் ஜர்னீஸ் என்ற வெப் சீரிஸ்சில் ஆரி அர்ஜூனா நடித்திருக்கிறார் என்பதுதான் இப்போதைக்கு அவரது ரசிகர்களுக்கான ஆறுதலான செய்தி. இந்த வெப்சீரிஸ்க்கு பிறகாவது அவருக்கான தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இயக்குநர்களை டார்ச்சர் செய்யும் தனது பாணியை அவர் மாற்றிக்கொள்வது அவரது சினிமா பயணத்துக்கு உதவும்.

- Advertisement -

சற்று முன்