- Advertisement -
புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் ரகசிய போலீஸ் 115 நாளை நமதே இதயக்கனி ஊருக்கு உழைப்பவன் மீனவ நண்பன் இன்று போல் என்றும் வாழ்க உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் ஷெட்டுக்குள் வரும்போது சாதாரணமாக நடந்து வர மாட்டார். ஒரு 2 தடவை ஜம்பி பண்ணி அப்புறம் 4 ஸ்டெப் நடப்பார். அப்புறம் 2 தடவை ஜம்ப் பண்ணி அப்புறம் 4 ஸ்டெப் நடப்பார். அப்படிதான் விளையாட்டுத்தனமான குறும்புடன் அவர் கலகலப்பாக ஷெட்டுக்குள் வருவார் என்று கூறியிருக்கிறார்.





