- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் பார்த்த அர்ஜூன் ரசிகர்கள், அவருக்கு வைத்த முக்கிய கோரிக்கை - ஆக்‌ஷன் கிங்...

லியோ படம் பார்த்த அர்ஜூன் ரசிகர்கள், அவருக்கு வைத்த முக்கிய கோரிக்கை – ஆக்‌ஷன் கிங் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அர்ஜூன், கடந்த 1990களில் மிக முக்கிய நடிகராக வலம் வந்தவர். இவரது சங்கர் குரு படம் பெரிய அளவில், ஆக்சன் படமாக அமைந்திருந்தது. அதன்பிறகு பல வெற்றிப் படங்களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படம், அர்ஜூன் சினிமா பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது.

அர்ஜூன் படங்களை பொருத்த வரை, சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். நிறைய ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல், சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அசத்துவார். சேவகன் என்ற படத்தை, அர்ஜூனே டைரக்ட் செய்திருந்தார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இதில் நடித்திருப்பார்.

ஜெண்டில்மேன், பிரதாப், ரோஜாவை கிள்ளாதே, ஆயுதபூஜை, கர்ணா, மருதமலை என பல வெற்றிப் படங்களை தந்த அர்ஜூன், ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லன் நடிப்பை தேர்வு செய்தார். மங்காத்தா, இரும்புத்திரை, லியோ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இப்போது, அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறார்.

அர்ஜூனுக்கு இப்போது 61 வயதாகிறது. இன்னும் தனது பழைய கட்டுக்கோப்பான உடல்வாகை மெயின்டெயின்ட் செய்து வருகிறார். முதுமை தோற்றம் இன்னும் அவரை வெளிப்படுத்தாத வகையில், உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். அதனால், சண்டைக்காட்சிகளில் அதே பழைய வேகத்தை அவரிடம் காண முடிகிறது.

சில தினங்களுக்கு முன், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சென்னை கெருகம்பாக்கத்தில் அர்ஜூன் சொந்தமாக கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. மிக விரைவில், திருமண விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே லியோ படத்தில், அர்ஜூன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த கேரக்டரில் அர்ஜூனை பார்த்த அவரது ரசிகர்கள், இதுபோன்ற இடைச்செருகலான வில்லன் கேரக்டர்களில் நடித்து, உங்கள் இமேஜை குறைத்துக்கொள்ள வேண்டாம். லியோ படத்தில், நீங்கள் இல்லாவிட்டாலும் அந்த கதை எந்த விதத்திலும் பாதிக்காது. எனவே, உங்களுக்கு, நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில், கேரக்டர்களில் நடியுங்கள் என அர்ஜூனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்