- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம் வேண்டாம், நான் விஜய் படத்துல நடிக்கப்போறேன்- பிரம்மாண்டமான புராஜெக்ட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டு...

இந்த படம் வேண்டாம், நான் விஜய் படத்துல நடிக்கப்போறேன்- பிரம்மாண்டமான புராஜெக்ட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டு பின்னாளில் அவதிப்பட்ட ஸ்ரீதேவி, இந்த படத்தையா வேண்டாம்ன்னு சொன்னாங்க

- Advertisement -

நடிகை ஸ்ரீதேவி 80களின் காலகட்டத்தில் இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர். குறிப்பாக தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் பிசியான நடிகராக வலம் வந்த ஸ்ரீதேவி 1996 ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

இத்தம்பதியினருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தாலும் அவ்வப்போது சில திரைப்படங்களில் தலை காட்டினார் ஸ்ரீதேவி.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி விஜய்யின் “புலி” திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் ஸ்ரீதேவி ஒரு மிகப் பெரிய புராஜெக்ட்டை ஓரங்கட்டிவிட்டுதான் “புலி” படத்தில் ஒப்பந்தமானாராம்.

அதாவது அதே 2015 ஆம் ஆண்டு வெளியான “பாகுபலி” திரைப்படம்தான் அது. “பாகுபலி” திரைப்படம் எந்தளவுக்கு வெற்றிபெற்றது என்பதை நாம் பார்த்திருப்போம். இப்போதும் பிரபாஸின் கெரியரில் மைல் கல்லாக இருக்கும் திரைப்படம் “பாகுபலி” திரைப்படம்தான்.

இத்திரைப்படத்தில் சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிகவும் கம்பீரமாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது.

இவ்வாறு “பாகுபலி” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த சிவகாமி கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்றுதான் நினைத்தார்களாம். நினைத்தது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவியையும் சந்திக்க சென்றிருக்கின்றனர்.

ஆனால் ஸ்ரீதேவி, “பாகுபலி” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். மாறாக அதே சமயத்தில் விஜய்யின் “புலி” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஒரு வேலை ஸ்ரீதேவி “பாகுபலி” திரைப்படத்தில் நடித்திருந்தால் ஸ்ரீதேவியின் கெரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கும். எனினும் 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி இந்த உலகை விட்டே பிரிந்தார்.

சற்று முன்