- Advertisement -
Homeபொழுதுபோக்குதீவிரவாதத்தை நியாயப்படுத்தும் படம்; விடுதலை 2 குறித்து கடுமையாக விமர்சித்த அரசியல் பிரபலம் -...

தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் படம்; விடுதலை 2 குறித்து கடுமையாக விமர்சித்த அரசியல் பிரபலம் – அதற்கு பதில் தந்த ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 20ம் தேதி விடுதலை 2ம் பாகம் படம் வெளியானது. சிலர் இந்த படத்தை எதிர்மறையாக விமர்சித்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 3 நாட்களில் உலகளவில் 24 கோடி ரூபாய் கடந்து வசூலில் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், தனது எக்ஸ் பதிவில் விடுதலை 2 படம் குறித்து கூறியிருப்பதாவது, நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும் பெருமைப்படுத்தியும் வெளியாகி உள்ள விடுதலை 2 படக்குழுவினர் மீது உபா சட்டம் பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இந்த படத்தின் மீது தேசிய புலனாய்வு முகமை கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

காவல்துறையின் விசாரணை, காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல் வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் படத்தின் இயக்குனர். திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார். பெருமாளின் பயங்கரவாதத்தால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம்.

பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்றத் துடிக்கும் சக்திகளை திமுக ஊக்குவிப்பது அம்பலமாகிறது. நக்சல் வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும். சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் மோசமானவர்களே, திரையரங்கில் கைதட்டி விசில் அடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும் நக்சல் வாதத்தால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றிப் பார்க்க வேண்டும்.

- Advertisement -

இன்று தமிழகத்தில் தினக் கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல் வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சார்ந்தவர்கள்தான். அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள். வாயில் மட்டுமல்ல, எல்லாவற்றின் மூலமாகவும் உங்களை பார்த்து சிரிப்பார்கள் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜ!ன் சம்பத்தின் இந்த பதிவை பகிர்ந்து கருத்து பதிவிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீ ராம், நம்முடைய கடந்த கால வரலாற்றையும் நிகழ்கால நிலையையும் எடுத்துச் சொல்லும் கிளாசிக் திரைப்படம் தான் விடுதலை 2. தயவுசெய்து ஒரு படத்தை கலை வடிவமாக பாருங்கள் என்று அதற்கு பதில் தந்துள்ளார். இது தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்