கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த சில நடிகர்கள் இப்போது உள்ள ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து அசத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் சத்யராஜ் அர்ஜூன் நவரச நாயகன் கார்த்திக் அரவிந்த் சாமி போன்றவர்களின் வில்லன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய சின்னா படத்திலும் ஏறக்குறைய வில்லன் மாதிரியாக ஒரு கேரக்டரில்தான் அர்ஜூன் நடித்திருந்தார். விஷால் நடித்த இரும்புத்திரை படத்திலும் அர்ஜூன் வில்லனாக மிரட்டி இருந்தார்.
அதே போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். கடந்த மாதம் அஜீத்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திலும் அர்ஜூன் வில்லனாக தான் நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் அர்ஜூன் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜூனும் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் அர்ஜூன் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவில்லை. மாறாக அவர் ஒரு நல்லவிதமான கேரக்டரில் ஹீரோவுக்கு சாதகமாக செயல்படும் ஒரு கேரக்டராக இந்த படத்தில் வருகிறார்.
அதே நேரத்தில் இந்த படத்தில் நடிகர் தனுஷூக்கு வில்லனாக நடிக்கப் போவது மலையாள நடிகர் ஜெயராம்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜெயராம். பல படங்களில் அவரது கேரக்டர் காமெடி கலந்த ஹீரோவாக தான் இருக்கும். குறிப்பாக முறைமாமன் புருஷலட்சணம் கோகுலம் பஞ்ச தந்திரம் தெனாலி துப்பாக்கி பொன்னியின் செல்வன் என பல படங்களில் அவரது நடிப்பு காமெடி கலந்திருக்கும்.
ஆனால் இந்த முறை விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் ஜெயராம் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதுவரை முழுநேர வில்லன் கேரக்டரில் ஜெயராம் நடிக்காத நிலையில் இந்த படத்தில் அவரது வில்லன் நடிப்பு வேற லெவலில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அர்ஜூன் நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக இல்லாமல் ஜெயராம் வில்லனாக நடிப்பதே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.





