நடிகர் அருண் விஜய்க்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் தான் என்று கூற வேண்டும். தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் என்பதற்கு பெயர் போன விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். 1990களிலேயே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். ஆனால் அவரது கெட்ட நேரம் அவர் நடித்த எந்த திரைப்படங்களுமே ஓடவில்லை.
இதன் காரணமாக திரைத்துறையில் இருந்து விலகியே இருந்தார் அருண் விஜய். அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தில் அவர் நடித்துவிட்டு போவார். ஆனால் அதுவும் வந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும். இப்படியான சமயத்தில், அவருக்கு மலை மலை திரைப்படம் வெளியானது.
மிகப் பெரிய அளவு இந்த திரைப்படம் ஓடவில்லை என்றாலும், முந்தைய அருண் விஜய் படங்களை விட இது ஓரளவு பேசப்பட்டது. இந்த நிலையில் அருண் விஜய் வாழ்க்கையே திருப்பி போட்டது என்னை அறிந்தால் திரைப்படம். அதில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தார் அருண் விஜய்.
அஜித்திற்கு வில்லனாக நடித்த அவர், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்ட அருண் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு, தனக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை கண்டு கண் கலங்கினார் அருண் விஜய். அனைவரும் எதிர்பார்த்தது போலவே நடிகரின் திரையுலக பயணம் டாப் கியரில் சென்றது.
இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணைந்து, தடையறத் தாக்க மற்றும் தடம் ஆகிய இரண்டு திரைப்படங்களை அவர் கொடுத்தார். இந்த இரண்டு திரைப்படங்களை விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, கவனிக்கத்தக்க படங்களில் நடித்து வந்த அருண் விஜய், இப்போது இயக்குனர் பாலாவுடன் இணைந்திருக்கிறார்.
சூட்டிங் சென்று வேண்டாம் என்று சூர்யா உதறித் தள்ளிய படத்தில் அவர் கதாநாயகனாகி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இதில் காது கேளாதவராக வாய் பேச முடியாதவராக அருண் விஜய் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ரெட்டை தல எனும் திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இதில் எதிர்பார்த்தது போலவே அருண் விஜய்க்கு இரண்டு வேடங்கள். இந்தத் திரைப்படத்தை, மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய படங்களை எடுத்து திருக்குமரன் இயக்குகிறார். படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.





