- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா என்றாலே பஞ்சாயத்து தானாக வந்துடும் போல, இப்ப அன்னபூரணி படத்துல வந்தது புது பிரச்னை...

நயன்தாரா என்றாலே பஞ்சாயத்து தானாக வந்துடும் போல, இப்ப அன்னபூரணி படத்துல வந்தது புது பிரச்னை – ஆரம்பமே இப்படியா?

- Advertisement -

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக பேசப்படுகிறார். ஏனெனில், ரஜினியை போலவே இவர் நடிகைகளில் செம மாஸ் காட்டி வருகிறார். தமிழ் நடிகைகளில் இப்போதைய நிலவரப்படி ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் சிலம்பரசன், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களுடன் ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா, ஒரு கட்டத்துக்கு பிறகு அந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்ட அவர், ஏழு ஆண்டுகள் காதலித்த நிலையில், அவரை திருமணமும் செய்துக்கொண்டார்.

- Advertisement -

ஆனால், திருமணமான சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பை, சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், எல்லாம் முறைப்படி, விதிமுறைகளை பின்பற்றியே நடந்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு ஆவணங்களை காட்டி, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ரூ. 50 கோடி மதிப்புள்ள சொந்த விமானத்தில் பறக்கும் நயன்- விக்கி ஜோடி குறித்த அப்டேட்டுகள் அடிக்கடி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன, இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்துவரும் நயன்தாரா, அடுத்து மணிரத்னம் படத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தில் கமலுக்கு முதன்முறையாக நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே நயன்தாரா நடிக்கும் 75வது படத்துக்கு, அன்னபூரணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிலேஷ் கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநரின் இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறார். இதே அன்னபூரணி என்ற பெயரில் லிஜிமோல் ஜோஸ், லாஸ்லியா நடிக்கும் ஒரு படம், இந்த மாதம் வெளிவர இருக்கிறது.

அதனால், அன்னபூரணி பட டைட்டிலை பார்த்த அவர்கள், அதிர்ச்சியாக அவர்களிடம் விசாரித்த போது, அன்னபூரணி என்ற பெயருக்கு கீழே ‘த காடு அஸ் ஆப் புட்’ என துணைப் பெயர் வருவதாக கூறி சமாளித்து இருக்கின்றனர். இப்படி ஒரே பெயரில் ஏற்கனவே நாய் சேகர், நாய் சேகர் ரிட்டர்ன், செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு படங்கள் வந்தன. இப்போது அன்னபூரணி டைட்டில் குழப்பம், நயன்தாரா படக்குழுவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. நயன்தாரா என்றாலே, தானாகவே பஞ்சாயத்து வந்துடும் போல் இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்