ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173. இந்த படத்தை முதலில் டைரக்ட் செய்ய இருந்தது டைரக்டர் சுந்தர் சி தான். ஆனால் அவர் இந்த படத்தை விலகுவதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். அதன்பிறகு இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை தயாரிப்பது நடிகர் கமல்ஹாசனின் சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ்தான். இதற்கிடையே சமீபத்தில் சிபி சக்ரவர்த்தியும் இந்த படத்தை விட்டு வெளியேறி விட்டார். அவருக்கு பதிலாக ஓ மை கடவுளே டிராகன் படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் ரஜினி படத்தை இயக்குகிறார் என்கிற தகவல் வெளியானது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் இப்போது நடிகர் சிம்பு நடித்து வருகிறார். அந்த படத்துக்கு பின்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ஒரு படத்தில்தான் சிம்பு நடிக்க உள்ளார். அந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இதற்கிடையே நடிகர் சிம்புவிடம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு பற்றி கூறி அஸ்வத் அவரிடம் சம்மதம் வாங்கி விட்டார்.
ஆனால் இதில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை. அதனால் சில புதிய இயக்குனர்களை சிம்புவிடம் அனுப்பி கதை கேட்குமாறு கூறிய நிலையில் சிம்புவிடம் அவர்களிடம் கதை கேட்டுள்ளார். ஏனெனில் சிம்பு படத்தையும் ரஜினி படத்தையும் மாறி மாறி இயக்குமாறு அஸ்வத்திடம் ஏஜிஎஸ் நிறுவனம் சொன்னதை, அஸ்வத் ஏற்க மறுத்து விட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் இன்னும் சிபி சக்ரவர்த்தியை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியேற்றவில்லை. ரஜினி விருப்பத்தின்படி கதையில் மாற்றங்களும் திருத்தங்களும் செய்யும் பணியில் அவர் இப்போதும் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை ரஜினிக்கு சிபி சக்ரவர்த்தி செய்யும் கதை மாற்றத்தில் திருப்தி ஏற்பட்டால் சிபிக்கு ரஜினி ஓகே சொல்லிவிடும் வாய்ப்பு அதிகம்.
அதனால் இப்போது ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பும் அஸ்வத் மாரிமுத்துவுக்கு இல்லாமல் போய்விடும். சிம்பு படத்தை இயக்கும் வாய்ப்பும் நழுவி விடும். இப்படிப்பட்ட ஒரு இடியாப்ப சிக்கலில் அஸ்வத் மாரிமுத்து மாட்டியிருக்கிறார். ரஜினிக்கு கதை தான் முக்கியம். சிபி அஸ்வத் யார் இயக்குனர் என்பது முக்கியமில்லை என்பதால் சிபிக்கு ரஜினி வாய்ப்பு தந்தால் அஸ்வத்துக்கு சிம்பு ரஜினி என 2 படங்களுமே இல்லாமல் போய்விடும்.





