- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படத்தில் என்னுடைய அக்மார்க் சீன் இருக்கிறது... சஸ்பென்சை சைலன்டாக கூறிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்......

கூலி திரைப்படத்தில் என்னுடைய அக்மார்க் சீன் இருக்கிறது… சஸ்பென்சை சைலன்டாக கூறிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்… சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி…

- Advertisement -

நடப்பாண்டு தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்கள் ஏராளமாக உள்ளன. இதில் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது. இது போக விஜய்யின் ஜனநாயகன், கமல்ஹாசன் சிம்பு நடித்திருக்கும் தக் லைப், தனுஷின் இட்லி கடை மற்றும் குபேரா, சூர்யா நடிப்பில் ரெட்ரோ மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கும் படங்கள் என நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம். விஜயை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கம்போல் அனிருத்தான் இசையமைப்பாளர்.

- Advertisement -

இதற்கு முந்தைய திரைப்படங்களில் எப்போதும் போதை பொருள் கடத்தலை பற்றியே கதை கூறும் லோகேஷ் கனகராஜ் இந்த முறை சற்று வித்தியாசமாக தங்கம் கடத்தல் தொடர்பான கதையில் இறங்கி இருக்கிறார். மேலும் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே, தனது வழக்கமான பயணம் போல இது இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தி இருந்தார்.

மிக முக்கியமாக எல் சி யு வுக்குள் கூலி திரைப்படம் வராது என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் ரஜினியின் நண்பனாக வருகிறார் சத்யராஜ். அவரது மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இது போக நாகர்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷாகிர் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். ரஜினிக்கு தேவா என்னும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படமும் இதே தேதியில்தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜிடம் தொகுப்பாளர் ஒருவர், உங்கள் திரைப்படத்தில் அனைத்திலும் சாப்பாடு சம்பந்தப்பட்ட காட்சி இருக்கும். இதிலும் சூப்பர் ஸ்டாருடன் அப்படி ஒரு காட்சி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உடனடியாக ஆமாம் என்று பதிலளித்தார் லோகேஷ். அதேபோல் ரஜினியின் பழைய பட காட்சிகளை இதில் எடுக்கவில்லை என்றும் அதே சமயம் வின்டேஜ் ரஜினியை படத்தில் காணலாம் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

- Advertisement -

சற்று முன்