விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ஆகும். தமிழகத்தின் மொத்த தொலைக்காட்சி சேன்னல்களை ஒப்பிட்டு பார்க்கையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருப்பது இந்த நிகழ்ச்சிதான். அந்தளவுக்கு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கிறது.

பிக் பாஸ் தமிழில் இதுவரை 6 சீசன்கள் வந்திருக்கிறது. பிக் பாஸ் 7 ஆவது சீசன் இன்னும் இரண்டோ அல்லது மூன்றோ மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. முதல் சீசனில் இருந்து கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். நடுவில் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் மட்டும் சில வாரங்கள் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்.
கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்றே பலரும் கூறினர். ஆனால் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அரசியல் கட்சி தொடங்கிய பிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதே போல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை சிலம்பரசன்தான் தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் 7 ஆவது சீசனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் சம்பளத்தை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 150 கோடிகள் சம்பளமாக கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. கமல்ஹாசன் தான் நடிக்கும் படத்திற்கு கூட இந்தளவு சம்பளம் வாங்கியிருப்பாரா என்று தெரியவில்லை.





