- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகனில் கயாடுவுக்கு முதலில் இந்த ரோல்தான் கொடுத்திருந்தேன்... உண்மையைக் கூறி ஷாக் கொடுத்த இயக்குனர் அஸ்வந்த்...

டிராகனில் கயாடுவுக்கு முதலில் இந்த ரோல்தான் கொடுத்திருந்தேன்… உண்மையைக் கூறி ஷாக் கொடுத்த இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து…

- Advertisement -

இந்த ஆண்டு தொடங்கிய மூன்று மாதங்களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த திரைப்படம் டிராகன். இத்தனைக்கும் இதன் ட்ரெய்லர் வெளியான சமயத்தில், பல்வேறு விமர்சனங்கள் எதிராக கிளம்பின. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் போன்று இது இருப்பதாகவும், வழக்கம்போல இளைய தலைமுறையை சீரழிக்கும் ஒரு படத்தை இயக்குனர் எடுத்து விட்டதாகவும் பலர் அவரை சாடினார்கள்.

ஏற்கனவே, பிரதீப் ரங்கநாதன் எடுத்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், ஒரு பக்கம் அதற்கு எதிரான விமர்சனங்களும் எழுந்தன. நவீன காலத்திற்கு ஏற்ப இதன் கதை எழுதப்பட்டிருந்தாலும், பழமை வாதத்தை இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் காட்டுவதாக கூறினர். இப்படியான சமயத்தில்தான் டிராகன் ட்ரெய்லரும் வெளியாகி பேசு பொருளானது.

- Advertisement -

அப்போதே இந்த திரைப்படம் குறித்து கூறிய இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து, இது நிச்சயமாக டான் போல் இருக்காது என்றும், அனைத்தையும் ட்ரெய்லரில் கூறி விட வேண்டாம் என்ற ஒரே காரணத்திற்காகவே சில பகுதிகளை மட்டும் தாங்கள் காட்டி இருப்பதாகவும் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே படம் அமைந்தது தான் இங்கு திருப்புமுனை.

யாருமே எதிர்பார்க்காத வகையில் டிராகன் திரைப்படம் வசூல் மேல் வசூல் குவிக்க, வெறும் பத்து நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் பணத்தை அள்ளியது. தற்போது வரை அந்த திரைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் சென்று கொண்டே இருப்பதால், விரைவில் 150 கோடி ரூபாய் எட்டும் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

படிப்பு ஒன்று தான் முக்கியம் என்பதை மிக ஸ்ட்ராங்காகவும், அழுத்தம் நிறைந்த காட்சிகளைக் கொண்டும் கூறி இருப்பதால் படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஸ்வந்த் மாரிமுத்து, எனது முதல் திரைப்படமான ஓ மை கடவுளிலும் இரண்டு ஹீரோயின்கள், இதிலும் இரண்டு கதாநாயகிகள்.

இதில் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது கயாடுதான். பிறகு எனக்கு திடீரென அந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நினைத்ததால் பல்லவி ரோலை கயாடுவுக்கு கொடுத்தேன். அவரும் உடனடியாக ஏற்றுக் கொண்டு நடித்தார். நானும் பிரதீப் ரங்கநாதனும் 10 ஆண்டுகளுக்கு மேல் நண்பர்கள். இருவரும் சாதித்து விட்டு தான் இந்த திரைப்படத்தில் இணைய வேண்டும் என்று எண்ணினோம். அப்படியே நடந்து விட்டது. 37 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்