- Advertisement -
Homeபொழுதுபோக்குகாவாலா பாட்டுக்கு டேன்ஸ் ஆடிய தமன்னா ஜெயிலர் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? -...

காவாலா பாட்டுக்கு டேன்ஸ் ஆடிய தமன்னா ஜெயிலர் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? – விவரம் இதோ

- Advertisement -

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ஜெயிலர் திரைப்படமானது முதல் நாளிலேயே 50 கோடிகளை தாண்டி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதோடு இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து புக்கிங் நடைபெற்றுள்ளதால் இன்னும் வசூல் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், தமன்னா என பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளதால் இந்த படம் இந்தியா முழுவதுமே தற்போது வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. இந்தப்படத்தில் சில நெகட்டிவ் விடயங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாகவே சூப்பர் ஸ்டாரின் நடிப்பு பிரமாதமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

பீஸ்ட் படத்தில் நெல்சன் பெற்ற தோல்விக்கும், அண்ணாத்த படத்தில் ரஜினி அடைந்த தோல்விக்கும் இந்த படம் இருவருக்குமே ஒரு மிகப்பெரிய கம்பேக் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் காவாலா படத்திற்கு நடனம் ஆடியுள்ள தமன்னாவும் பெரிய அளவில் பாராட்டினை பெற்றுள்ளார். மேலும் இந்த படத்தில் காவாலா பாடலை தவிர்த்து ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிதிருக்கும் தமன்னாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

காவலா பாட்டிற்காக நடனமாடிய தமன்னா இன்னும் சில காட்சிகளில் வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்காக தமன்னா ஐந்து நாட்கள் மட்டுமே கால்ஷீட்டை ஒதுக்கி இருந்தாலும் மூன்று கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார். ஒரு பாட்டு மற்றும் நான்கைந்து சீன்களுக்கு இவ்வளவு சம்பளமா? என்று அனைவரும் வியப்புடன் பார்த்தாலும் காவாலா பாட்டு இந்த படத்தின் பிரமோஷனுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்றால் அதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

அதனால்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் அவர் அவருக்கு பல கோடிகளை கொட்டி கொடுத்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த ஜெயிலர் படத்திற்காக 5 நாட்கள் மட்டுமே நடித்த தமன்னா மூன்று கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்