- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இயக்குனர்களின் ஒருவராக உருவெடுக்கிறாரா அட்லி... அடுத்த படத்திற்கான ஊதிய தொகையை...

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இயக்குனர்களின் ஒருவராக உருவெடுக்கிறாரா அட்லி… அடுத்த படத்திற்கான ஊதிய தொகையை கேட்டதும் ஆடிப்போன திரையுலகம்…

- Advertisement -

அட்லி இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜவான். தமிழ் திரையுலகை கடந்து இந்தி திரையுலகிற்கு சென்ற அவர், ஷாருக்கான்னை வைத்து படம் எடுத்து சாதனை படைத்தார். இந்த திரைப்படத்தில் தமிழில் இருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க கமர்சியல் பாணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தி திரை உலக ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்ததால் அதற்கு வரவேற்பு எகிறியது. திரையரங்குகளில் கொண்டாடிய ரசிகர்கள் அதனை பிரம்மாண்ட வெற்றி பெறச் செய்தனர்.

- Advertisement -

இதனால் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அதேசமயம் தமிழில் இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே தமிழில் வெளியாகியிருந்த ஏராளமான திரைப்படங்களின் காட்சிகளை அட்லி அதில் வைத்திருந்ததாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க, அட்லி இந்தியிலேயே அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார். தனது இயக்கத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற தெறி திரைப்படத்தை அவர் இந்தியில் தயாரித்து வருகிறார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதனிடையே தனது அடுத்த திரைப்படம் குறித்தும் அட்லி பொதுவெளியில் பற்றி பேசி வந்தார். அதில் ஷாருக்கான் மற்றும் விஜயை வைத்து இயக்க தான் கதையை எழுதி வருவதாகவும், இது குறித்து இரண்டு நடிகர்களிடம் தான் ஏற்கனவே பேசி விட்டதாகவும் அவர் கூறினார். விரைவில் நாங்கள் இணைவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படியான சூழலில் அவர் அடுத்ததாக, தெலுங்கு பக்கம் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அல்லு அர்ஜுனை வைத்து அட்லி படம் இயக்க இருக்கிறாராம். இதற்காக மட்டும் அவருக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்திய திரை உலகில் அதிகம் சம்பளம் பெறும் இயக்குனர்களில் முதல் ஆளாக அட்லி இருப்பார் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்