- Advertisement -
Homeபொழுதுபோக்குசல்மான் கானுடன் அட்லி இணையும் படம் உறுதி... அந்தத் திரைப்படம் போல தான் இதுவும் இருக்குமாம்......

சல்மான் கானுடன் அட்லி இணையும் படம் உறுதி… அந்தத் திரைப்படம் போல தான் இதுவும் இருக்குமாம்… இவரு இன்னும் திருந்தல மாமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் திரை உலகிற்கு சென்று ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்னும் சாதனை படைத்தவர் இயக்குனர் அட்லி. ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும் தமிழில் யாரும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

 

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம் பெற்ற காட்சிகள்தான். ஜவான் திரைப்படத்தில் ஏராளமான திரைப்படங்களின் தழுவல் இருப்பதாக கூறி தமிழ் ரசிகர்கள் அலுத்துக் கொண்டனர். எதற்கு அவர் இவ்வளவு அபத்தமாக படம் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

 

- Advertisement -

ஒரு கதை என்றால் சரி ஆனால் படத்தை பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் தங்களுக்கு பழைய படங்களின் நினைவு வந்து போவதாகவும், இதற்கு ஏன் அட்லி படம் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்தனர். இதனால் ஜவான் திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

 

அதேசமயம் இந்தியில் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. அங்குள்ள ரசிகர்களுக்கு அட்லியின் இந்த மேக்கிங் புதிது என்பதால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். படமும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தொடர்ந்து இந்தி திரைப்படங்களை இயக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார் அட்லி.

 

சொல்லப்போனால் அவர் மும்பையிலேயே ஒரு பங்களாவை வாங்கிவிட்டு செட்டில் ஆகிவிட்டார். தமிழில் அவர் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தெறி படத்தை இந்தியில் தயாரித்திருக்கிறார். இதுபோக சல்மான் கான் இடமும் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார் அட்லி. இந்த திரைப்படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

 

இதில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் நடிக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். இதில் சல்மான் கானுக்கு இரண்டு வேடம் என்றும், ஃபேண்டஸி ஜானரில் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா படத்தைப் போன்று இதுவும் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், அப்படி என்றால் நிச்சயம் இது மகதீரா படத்தின் சாயலாக தான் இருக்கும் என்று கூறலாமே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்