- Advertisement -
Homeபொழுதுபோக்குஹிந்தியை தொடர்ந்து தமிழில் மீண்டும் தயாரிப்பில் இறங்கும் அட்லி... படத்துல ஹீரோதான் வெயிட்டே... ஆனா இயக்குனரு!...

ஹிந்தியை தொடர்ந்து தமிழில் மீண்டும் தயாரிப்பில் இறங்கும் அட்லி… படத்துல ஹீரோதான் வெயிட்டே… ஆனா இயக்குனரு!…

- Advertisement -

தற்போது இந்தி முழுக்க பேசப்படும் ஒரே இயக்குனர் யார் என்றால் அது அட்லியாக தான் இருக்க முடியும். கடந்த வருடம் அவர் கொடுத்த ஜவான் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முதல் முறையாக நயன்தாரா கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் அவரைவிட தீபிகா படுகோனுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டிருந்ததாக ரசிகர்கள் கூறினர். அதுபோக விஜய் சேதுபதியும் அதில் வில்லனாக நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் அவரது கதாபாத்திரத்தில் அந்த அளவு வெயிட் இல்லை என்று பலரும் கூறினர். தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் சுத்தமாக ஈடுபடவில்லை என்றாலும், பாலிவுட்டில் வசூல்மேல் வசூல் குவித்தது. இங்கு அத்தனை திரைப்படங்களையும் ஒன்றாக எடுத்து அதற்கு ஜவான் என்று பெயர் வைத்திருப்பதாக அட்லியை பலரும் சாடியர்.

ஆனால் பாலிவுட் ரசிகர்களுக்கு அது புதிதாக இருந்தது. அட்லி கச்சிதமாக காய் நகர்த்தி படத்தை எடுத்திருப்பதாக பாராட்டி, ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்ட செய்தனர். இதனால் அட்லி அங்கு கொண்டாடப்பட்டு வருகிறார். இது மட்டுமல்லாமல் இந்தி திரை உலகில் அவர் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

தமிழில் அவர் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தெறி திரைப்படத்தின் ரீமேக்காகத்தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷிற்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வருண் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி மிக விரைவில் அட்லி தயாரிப்பாளராக அங்கு அவதாரம் எடுத்திருப்பதால் பலராலும் கவனிக்கப்பட்டு இருக்கிறார்.

இப்படியான சூழலில் தற்போது தமிழிலும் மீண்டும் தயாரிப்பு பணியில் அட்லி கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவை திற எனும் படத்தை தயாரித்திருந்தார். ஆனால் அது திரைப்படம் சரியாக போகவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து அவர் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இதனை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி ஆகிய திரைப்படங்களை எடுத்த பாலாஜி தரணிதரன் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்