சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்த நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார். அவ்வபோது தோல்வி படங்கள் கொடுத்தாலும், அதனை ஈடு செய்யும் விதமாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்து மலைக்க வைத்து விடுவார் எஸ்.கே.
அவரது திரைப்பயணத்தில் டாக்டர் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் வசூலையும் முதல்முறையாக அள்ளியது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த டான் திரைப்படமும் சரியான நேரத்தில் கிளிக் ஆக, 100 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இதன் பிறகு சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து பிரின்ஸ் படத்தில் நடித்தார்.
கடந்த தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம், படு தோழியை சந்திக்க சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டையும் சற்று அசைத்துப் பார்த்தது. இதை எடுத்து உடனடியாக மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன், மாவீரன் திரைப்படத்தில் நடித்தார்.
ஒரு கோழையான இளைஞன் எப்படி வீரனாகிறான் என்பதை சுவாரசியமான கதைக்களத்துடன் எடுத்துக் கூறிய இந்தத் திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, பேட்ச் ஒர்க் போடும் தொழிலாளியாக நடித்த யோகி பாபு, தனது அப்பாவித்தனமான காமெடியால் படத்திலும் ஆங்காங்கே பேட்ச் ஒர்க் போட்டு மாவீரனை தலை நிமிர வைத்தார்.
இதன்பிறகு தனது 21 வது திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இந்து திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார்.
ராணுவ பின்னணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டைட்டில் வரும் தீபாவளியன்று வெளியாகிறதாம். சமீபத்தில் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன அலுவலகத்திற்குச் செல்ல, அங்கிருந்த உலக நாயகன், எஸ் கே-வை பார்த்து தனது தயாரிப்பு நிறுவனக் குழுவினரிடம் எங்கள் ஹீரோ என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் உள்ளம் மகிழ்ந்துள்ளார்.





