- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னையெல்லாம் தளபதி மாதிரி அழவைக்கவே முடியாது - செக் மோசடி வழக்கு குறித்து கேட்ட செய்தியாளர்களிடம்...

என்னையெல்லாம் தளபதி மாதிரி அழவைக்கவே முடியாது – செக் மோசடி வழக்கு குறித்து கேட்ட செய்தியாளர்களிடம் நக்கலாக பேசிய நடிகர் விமல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்து பிறகு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். பசங்க கேடி பில்லா கில்லாடி ரங்கா களவாணி கலகலப்பு மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து அவர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் மன்னர் வகையறா என்ற படத்தை அவரே சொந்தமாகவும் தயாரித்தார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். தயாரிப்பாளரான விமல், மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க பைனான்சியர் கோபி என்பவரிடம் விமல் கடன் வாங்கியிருந்தார்.

- Advertisement -

அந்த கடன் தொகையாக 4.5 கோடி ரூபாய்க்கு நடிகர் விமல் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து பைனான்சியர் கோபி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நடிகர் விமலுக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு எதிராக நடிகர் விமல் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதுவரையில் தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை கமலா தியேட்டரில் ஜனநாயகம் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் விமல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்னிக்கு ஜனநாயகன் படத்தை எல்லோரும் வந்து பார்த்தோம். சந்தோஷமாக இருந்தது. முன்பே வந்திருந்தால் கூட தளபதி படமாய் இருக்கும். இப்பவும் தளபதி படம். இப்ப நம்ம தமிழ்நாட்டோட சிஎம் படத்தை பார்த்த ஒரு சந்தோஷம்.

- Advertisement -

எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க. என்னையும் ரசிகர்கள் எல்லாம் விடலே, டான்ஸ் ஆடியே ஆகணும்னு பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டு ரெண்டுவாட்டி அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரொம்ப ஜாலியா இருந்தது. ரசிகர்களும் அது மாதிரி நிறைய சென்டிமென்ட் சீன்களும் ரொம்ப நல்லா இருந்தது.

இந்த படத்துல பார்த்தது அப்படியே நிஜமாயிடுச்சு. ரசிகர்கள் அப்படியே இருக்கறாங்க என்று நடிகர் விமல் கூறினார். தொடர்ந்து அவரிடம் செக் மோசடி வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் விமல், அதைப்பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ரைட் நன்றி வணக்கம். என்னை எல்லாம் தளபதி மாதிரி அழ வைக்கவே முடியாது என்று நக்கலாக பேசிவிட்டு சென்றார்.

- Advertisement -

சற்று முன்