- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவீரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்தது போல, அயலான் படத்துலயும் ஒரு சம்பவம் இருக்கா... இதுக்கு...

மாவீரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்தது போல, அயலான் படத்துலயும் ஒரு சம்பவம் இருக்கா… இதுக்கு யாரு வாய்ஸ் கொடுக்குறாங்க தெரியுமா!…

- Advertisement -

ஆரம்பத்தில் நகைச்சுவை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது படத்துக்கு படம் வித்தியாசம் கொடுக்க முயற்சித்து வருகிறார். அது பல சமயங்களில் தோல்வியை கொடுத்தாலும், சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாக எஸ் கே வலம் வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படங்கள் இல்லாமல் இருந்தது. இப்படியான சூழலில் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம், எஸ்கேவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. மேலும் முதல் முறையாக அவரது திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதனைத் தொடர்ந்து டான் படத்தில் அவர் நடித்தார். விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் வரவேற்பை வரவில்லை என்றாலும், வசூலில் மீண்டும் 100 கோடி ரூபாய் குவித்து சாதனை படைத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் சிவகார்த்திகேயன், பிரின்ஸ் என்னும் படுதோல்வி படத்தில் நடிக்க அதனை ஈடு செய்யும் விதமாக மாவீரன் திரைப்படத்தை கொடுத்து மீண்டார். தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை வென்ற மண்டேலா இயக்குனர் மடோனா அஸ்வின் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவிற்கு மாவீரன் திரைப்படம் வித்தியாசமானது என்றே கூறலாம். அது கூறப்பட்ட விதம் சற்று சுவாரசியமாக இருந்ததால் மாவீரனை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் கேட்கும் ஒரு குரல் கதாபாத்திரத்திற்கு, விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார்.அது சரியாகவே க்ளிக் ஆகி இருந்தது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு ஏ ஆர் முருகதாசுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இதன் நடுவே வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வெளியாகிறது.

இதன் படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு தொடங்கிய சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் தடைப்பட்டு தற்போது, பொங்கலன்று திரையரங்குகளை குறி வைத்துள்ளது. இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார்தான் இதனை எடுத்துள்ளார். பூமிக்கு ஏலியன் வந்தால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஏலியனுக்கு என்று தனி வாய்ஸ் ஓவர் உள்ளதாம். அதற்கு யார் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பதை தான் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறது படக்குழு.

- Advertisement -

சற்று முன்