- Advertisement -
Homeபொழுதுபோக்குவீட்டுக்குள்ள பெரிய டாஸ்க்கே அவரை சமாளிக்கறதுதான்… வாட்டர்மெலன் திவாகரின் அலப்பரைகள், பிக்பாஸ்சில் தெறித்து ஓடும்...

வீட்டுக்குள்ள பெரிய டாஸ்க்கே அவரை சமாளிக்கறதுதான்… வாட்டர்மெலன் திவாகரின் அலப்பரைகள், பிக்பாஸ்சில் தெறித்து ஓடும் போட்டியாளர்கள்!

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது நடப்பாண்டில் 9வது சீசன் விஜய் டிவியில் துவங்கி 2 நாட்களாகி விட்டது. கடந்த 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து 9வது சீசனினும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடர்கிறார்.

வழக்கமாக பிக்பாஸ் தமிழ் சீசனில் பிரபல திரைப்பட நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் அதிகளவில் இடம்பெற்றனர். ஆனால் இந்த முறை பிக்பாஸ் சீசன் 9ல நிகழ்ச்சியில் ரட்சகன் ஜோடி ஸ்டார் படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் பிரவீன் காந்தி தவிர சினிமா பிரபலம் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

- Advertisement -

யூடியூப் பிரபலங்கள் பலரும் சீரியல் நடிகர் சிலரும் விஜய் டிவி பிரபலங்கள் என அதிக எண்ணிக்கையில் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அதிலும் பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக சென்றவர் வாட்டர்மெலன் ஸ்டார் நடிப்பு அரக்கன் என தன்னைத்தானே புகழ்ந்துக்கொள்ளும் திவாகர்தான். இவரை பிஸியோதெரபி டாக்டர் என்றும் கூறுகின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போலவும் அந்நியன் படம் சியான் விக்ரமன் போலவும் இவர் மிக கொடூரமாக நடித்துக் காட்டி மற்றவர்களை பயமுறுத்துவது வழக்கம். தன்னைத் தானே பெரிய நடிகர் போலவும் இவரது நடிப்பை பெரிய அளவில் மக்கள் புகழ்வது போலவும் இவரே தன்னை மிகைப்படுத்தி கற்பனையாக நினைத்துக் கொள்வதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

வீட்டுக்குள் புகுந்த முதல் நாளே, அரோரா என்ற இளம்பெண்ணிடம் உன் கண்கள் ரொம்ப அழகா இருக்கு என்று திவாகர் சொல்ல, உன் பேத்தி வயசு அந்த பொண்ணுக்கு என சக போட்டியாளர் எப்ஜே என்பவர் திவாகரை கலாய்த்தார். சிவாஜி போல ஒரு நடை நடந்த வந்த திவாகர் விஜே பாவாடையை மிதித்துவிட ஏய் பாவாடை பாவாடை என்று அவர் பதறிப் போய் கத்தியதும் பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறது.

சார், எல்லோரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக யூடியூப்பில் இணையத்தில் வைரலாகி உள்ளனர். ஆனால் நான் ஒரே ஆண்டில் மக்கள் மத்தியில் கடவுள் பிளஸ்சால் பிரபலமானவன் என்று இயக்குனர் பிரவீன் காந்தியிடம் திவாகர் தன்னைத்தானே புகழ்ந்து பேச ஆரம்பிக்க அவர் குட் குட் குட் என்ற சொன்னபடி ஆளை விடுடா சாமி என்பது போல் அங்கிருந்து நகர்ந்து ஓடிவிட்டார். இன்னும் வரும் நாட்களில் நடிப்பு அரக்கன் சக போட்டியாளர்களை என்ன பாடு படுத்துறாரோ, பிக்பாஸ் வைக்கிற டாஸ்க்கை விட இவரோட வீட்டுக்குள்ள இருக்கறதே பெரிய டாஸ்க்கா இருக்கும்போல என பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்