- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறதா தமிழக அரசு, அயலான் படம் ரிலீஸ்சில் வெடித்தது சர்ச்சை - ரசிகர்கள்...

இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறதா தமிழக அரசு, அயலான் படம் ரிலீஸ்சில் வெடித்தது சர்ச்சை – ரசிகர்கள் மோதலுக்கு இதுவே தூண்டுகோலா மாறிடுமே?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு, இந்த படம் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதற்கிடையே ஹாலிவுட் படத்தின் கதை தான் இது என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

எனக்கு வெளியே சொல்ல முடியாத துரோகத்தை செய்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்ற குற்றச்சாட்டை இசையமைப்பாளர் இமான் வைத்த போது, சமூக வலைதளங்களில் அனல் பறந்தது. ஆனால் நாளடைவில் அது நீறு பூத்த நெருப்பாக மாறிவிட்டது.

- Advertisement -

அயலான் படத்தை பொறுத்த வரை, தமிழ்நாடு முழுவதும் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. குறிப்பாக மல்ட்டி பிளக்ஸ், மால் தியேட்டர்களில் அதிக ஸ்கிரீன்களில் அயலான் படம்தான் திரையிடப்படுகிறது. இதற்காக தியேட்டர் பிஸினஸ் மட்டும் 40 கோடி ரூபாய் வரை ஆகியுள்ளது.

வரும் 12ம் தேதியன்று அயலான் ரிலீஸ் ஆகிற நிலையில், பொங்கல் பண்டிகை காலம் என்பதால், தினமும் சிறப்பு காட்சிகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதிகாலை காட்சி என்றால், 4 மணியா அல்லது 6 மணியா, அல்லது 7 மணியா என்பது பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை என்ற போதிலும் இது தமிழக அரசு மீது பலத்த விமர்சனத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நடிகருக்கு தகுந்தது போல தங்களது கொள்கைகளில் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி, விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆன போது தினமும் காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிக்குள் சிறப்பு காட்சி முதல்
அனைத்து காட்சிகளையும் நடத்திக்கொள்ள அனுமதித்தது. அதிகாலை 4 மணி, 6 மணி , 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்துக்கு மட்டும் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்