- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நாளில் அயலான், கேப்டன் மில்லர் படங்களின் வசூல் இத்தனை கோடியா? பொங்கல் போட்டியில் சிவகார்த்திகேயன்,...

ஒரே நாளில் அயலான், கேப்டன் மில்லர் படங்களின் வசூல் இத்தனை கோடியா? பொங்கல் போட்டியில் சிவகார்த்திகேயன், தனுஷ் முந்துவது யார் – லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படமும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் நேற்று ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த படங்களுடன் அருண்பாண்டியன் நடித்த மிஷன், விஜய் சேதுபதி கத்ரீனா கைப் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படங்களும் திரைக்கு வந்துள்ளன.

கே ஜே ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள அயலான் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் டைரக்ட் செய்துள்ளார். படம் ரிலீஸ் ஆன முதல்நாளே பாசிட்டவ் ஆன வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இது ஏலியன் படம் என்று ரசிகர்களால் குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -

அதே போல் பொங்கல் விழா ரிலீஸ் படமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவர் 3 கெட்டப்புகளில் வருகிறார். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சாணிக்காயிதம் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை வந்துக்கொண்டு இருக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை பொருத்த வரை காமெடி வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. குறிப்பாக பூமிக்கு ஏலியன் வருகை என்ற புதுவித கான்செப்ட் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கிறது. ஒரு அறிவியல்பூர்வமான கதை என்பதால், ரசிகர்களை விறுவிறுப்பான கதையால் திருப்திபடுத்துகிறது.

- Advertisement -

அதேபோல் தனுஷ் படத்தை பொருத்தவரை ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். படம் முழுக்க ஆக்சன் காட்சிகளாக துப்பாக்கி சத்தமே கேட்கிறது. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு பொதுவான ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுவார்களா என்பது பொங்கல் பண்டிகை முடிந்த பிறகுதான் தெரிய வரும். ஆனாலும், இது தனுஷூக்கு வெற்றிப்படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ரிலீஸ் ஆன அயலான், கேப்டன்மில்லர் படங்களுக்கான ஒரு நாள் வசூல் நிலவரம் தகவல் வெளிவந்துள்ளது. நேற்று மட்டும் திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்துக்கு ரூ. 9 கோடியும், தனுஷ் நடித்த அயலான் படத்துக்கு ரூ. 14 கோடியும் வசூலாகி உள்ளது. தவிர, அயலானை காட்டிலும் கேப்டன் மில்லர் படத்துக்கு அதிக புக்கிங் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்