- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னங்க இந்த திரைப்படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கிடைக்கலையா... வீணாகி போன ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

என்னங்க இந்த திரைப்படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கிடைக்கலையா… வீணாகி போன ரசிகர்களின் எதிர்பார்ப்பு…

- Advertisement -

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 71ஆவது தேசிய விருதை மத்திய அரசு வெளியிட்டது. இதில் சிறந்த தமிழ் படமாக அறிவிக்கப்பட்டது பார்க்கிங் திரைப்படம். ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குனராக அறிமுகமாகி இருந்த இந்த திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் என இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதனுக்குள் இருக்கும் ஈகோவை பிரதானப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

சிறந்த தமிழ் படம் மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இதேபோல், சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் பெற்றார். இது தவிர சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாசுக்கு அறிவிக்கப்பட்டது. வாத்தி திரைப்படத்தில் இசையமைப்பதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்லீ இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, ஜவான் திரைப்படத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 12th ஃபெயில் திரைப்படத்தின் ஹீரோவாக நடித்த, விக்ராந்த் மாசேவுக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த படமாக 12th ஃபெயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாள படமாக உள்ளோழுக்கு, சிறந்த தெலுங்கு படமாக பகவந்த் கேசரி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலி வடிவமைப்பு விருதை அனிமல் பெற்றிருக்கிறது. இப்படியான சூழலில், 2023 ஆம் ஆண்டு வெளியான பிற திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

முக்கியமாக இதை பட்டியலில் அயோத்தி திரைப்படம் எப்படி மிஸ் ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். மத நல்லிணக்கத்தை மையமாக வைத்து, அதில் உணர்வுபூர்வமாக கதையைக் கூறிய இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது.

இதேபோல் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்திற்கும் ஒரு விருது கிடைத்திருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதுபோக டாடா, குட் நைட், சித்தா, போர் தொழில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களும் விருதுக்கு தகுதியானவையே என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்