- Advertisement -
Homeபொழுதுபோக்குகதையை தான் காப்பியடித்து படம் எடுக்கறீங்க, கடைசியில் இந்த விஷயத்துல கூட யோசிக்க மாட்டீங்களா, விமர்சனத்தில்...

கதையை தான் காப்பியடித்து படம் எடுக்கறீங்க, கடைசியில் இந்த விஷயத்துல கூட யோசிக்க மாட்டீங்களா, விமர்சனத்தில் சிக்கிய பேபி ஜான் – எப்படி எல்லாம் உருட்றாங்க?

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மலையாள நடிகைகளில் மிக முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ, அண்ணாத்த, தொடரி, சாமி 2, பைரவா, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷூக்கு, மத்திய அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது. மேலும் கதாநாயகியை மையப்படுத்தி கதைகளில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார், சமீபத்தில் அவர் நடித்த ரகுதாத்தா படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது.

- Advertisement -

கடந்த 2016ம் ஆண்டில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான படம் தெறி. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். ராதிகா, பிரபு, சுனைனா, காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் தெறி படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக சிறப்பாக நடித்திருந்தார். தற்போது இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில், தெறி படம் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வருகிறது.

- Advertisement -

தமிழில் அட்லி இயக்கிய தெறி படத்தை, இந்தியில் ரீமேக் செய்து அட்லியின் உதவி இயக்குனர் காளிஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். பேபி ஜான் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பேபி ஜான் படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியானது. இது குறித்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. ஆனால் அந்த போஸ்டர் கடும் விமர்சனத்தின் சிக்கியுள்ளது. கடந்த மாதம் 10ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேட்டையன். இந்த படத்தின் போஸ்டரை அப்பட்டமாக அப்படியே காப்பி அடித்து, பேபி ஜான் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வழக்கமாக படத்தைத் தான் காப்பியடித்து எடுக்கிறார்கள். இப்போது போஸ்டரை கூட விட்டு வைக்காமல், ரஜினி பட போஸ்டரை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து பேபி ஜான் போஸ்டராக வெளியிட்டிருப்பது இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்