- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இயக்குனரை அப்படியே தூக்கிட்டு வாங்கடா, அஜீத்குமாரின் படம் பார்த்த தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா...

அந்த இயக்குனரை அப்படியே தூக்கிட்டு வாங்கடா, அஜீத்குமாரின் படம் பார்த்த தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில்தான் ஹீரோயிசம் பலமடங்கு அதிகம். தமிழ் படங்களில் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் ஓபனிங் சீன் என சில காட்சிகளில்தான் ஓவர் பில்டப் செய்து ஹீரோயிசம் காட்ட முடியும். ஆனால் தெலுங்கு படங்களில் காட்டும் ஹீரோயிசம் பில்டப் காட்சிகளை பார்த்தால் நமக்கு தலை சுற்றிவிடும். இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று நம்பவே முடியாத பயங்கரமான அதிசயங்களை திரையில் காட்டுவார்கள்.

பின்னால் ரயில் வேகமாக சீறிவரும் நிலையில் ரயிலுக்கு முன்னால் நடிகர் சிரஞ்சீவி ஒருவரை தோளில் சுமந்துக்கொண்டு ரயிலை விட வேகமாக தண்டவாளத்தில் ஓடி வந்துக்கொண்டிருப்பார். நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, எதிரில் பாய்ந்து வரும் ஜீப்பை எட்டி உதைத்தால் 100 அடி அது பின்னால் போய் விழும். வேகமாக வரும் லாரியை சுண்டுவிரலால் தடுத்து நிறுத்தி விடுவார்.

- Advertisement -

சுற்றி நிற்கும் வில்லனின் ஆட்கள் 100 பேர் மெஷின் கன் மூலம் பல ரவுண்டுகள் சுட்டாலும் ஒரு வட்டமான இரும்பு மூடியை வைத்துக்கொண்டு அத்தனை துப்பாக்கி குண்டுகளும் தன் மீது படாமல் தெலுங்கு ஹீரோ தப்பித்து விடுவார். இப்படி பல தெலுங்கு படங்களில் உலக அதிசயங்களாக பல ஹீரோயிச காட்சிகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது தெலுங்கு ஹீரோக்களின் வழக்கம். அதில் நந்தமூரி பாலகிருஷ்ணா முதலிடத்தில் இருப்பவர்.

சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தை அவர் பார்த்திருக்கிறார். படத்தில் வரும் பில்டப் காட்சிகளையும், ஹீரோயிசம் காட்சிகளையும் பார்த்து அசந்து போயிருக்கிறார். இப்படி ஒரு ஸ்டைலில் இயக்குனர்களின் பில்டப் காட்சிகள் நிறைந்த படங்களில் நான்தானே வழக்கமாக நடிப்பேன். அஜீத்குமாரை நடிக்க வைத்திருக்கிறாரே? யார் இந்த இயக்குனர், முதலில் அவரை இங்கே அழைச்சுட்டு வாங்க என்று நந்தமூரி பாலகிருஷ்ணா தன் ஆட்களிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து நடிகர் பிரபு தனது மருமகன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஆந்திரா சென்று அங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்துள்ளனர். பிரபுவின் மருமகன்தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் திலகம் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்ட நடிகர் பாலகிருஷ்ணா, அவர்களை வரவேற்று உபசரித்திருக்கிறார்.

பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை பாலகிருஷ்ணாவுக்கு மிகவும் பிடித்துப் போக விரைவில் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என்றும் உறுதி செய்துவிட்டார். அஜீத்குமாரின் அடுத்த படம் இயக்குவது உறுதியானால், அந்த படத்துக்கு பின்பு பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை ஆதிக் இயக்குவார், அல்லது அஜீத்குமார் பட வாய்ப்பு வேறு இயக்குனருக்கு செல்லும் பட்சத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படமே நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படமாக தான் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்