நடிகர் அஜீத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விடாமுயற்சி. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பலத்த தோல்வியை சந்தித்தது. ரூ. 200 கோடிக்கு மேல் லைகா நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிராகன் படம் 6 நாட்களில் ரூ. 75 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 6 நாட்களில் ரூ. 45 கோடியை வசூல் செய்துள்ளது. தினமும் ரூ. 8 கோடி வரை இந்த படம் வசூலித்து வருகிறது. இதே ரீதியில் இந்த படம் சென்றால் ரூ. 120 கோடி தமிழ்நாட்டில் மட்டுமே வசூலிக்கும். தமிழ்நாட்டில் ஷேராக மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் தரும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கும் டிராகன், பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த 2வது படம் என்பதும், இந்த படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் இது 2வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கிய நிலையில் லவ் டுடே என்ற படத்தை இயக்கிய நிலையில் முதன்முறையாக அவரே நாயகனாக நடித்திருந்தார்.
அதே போல் அஸ்வத் மாரிமுத்து முதலில் இயக்கிய படம் ஓ மை கடவுளே. இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இதைத் தொடர்ந்து இப்போது டிராகன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சில காட்சிகளில் அஸ்வத் மாரிமுத்து நடித்தும் உள்ளார். அடுத்ததாக இவர், நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 51வது படத்தை டைரக்ட் செய்யவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திலும் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். நடிகர்கள் பிரசன்னா பிரபு போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் குட்பேட் அக்லி படத்துக்காக சென்னையில் உள்ள காதர் நவாஸ்கான் ரோடு பகுதியில் நடிகை திரிஷா நடித்த சில காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. அதே போல் நடிகர் அஜீத்குமாரும் நடிக்கவேண்டிய ஒரு நாள் காட்சிகளும் மீதம் உள்ளது.
ஏற்கனவே இரவு பகல் பாராமல் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் இப்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது, அவரது அம்மாவின் உடல் நலம் பாதித்த நேரத்திலும் அவரை பார்க்க செல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் நிச்சயமாக அவர் விடுபட்ட காட்சிகளில் நடிக்க வரமாட்டார். படக்குழுவே ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து சமாளித்து கொள்ள வாய்ப்புள்ளது.





