- Advertisement -
Homeபொழுதுபோக்குசூடு பிடிக்கும் காவிரி பிரச்னை.. ரஜினியை உள்ளே விடமாட்டேன் என சொல்ல நீ யாருடா?.. கொந்தளித்த...

சூடு பிடிக்கும் காவிரி பிரச்னை.. ரஜினியை உள்ளே விடமாட்டேன் என சொல்ல நீ யாருடா?.. கொந்தளித்த பயில்வான் ரங்கநாதன்..

- Advertisement -

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்து விட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கர்நாடகா மாநிலத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று பந்த நடந்துவருகிறது. மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் மீண்டும் ஒரு பந்த் நடக்கவிருக்கிறது. இந்த சூழலில் தமிழர்கள் குறித்தும், ரஜினிகாந்த் குறித்தும் வாட்டாள் நாகராஜ் ரொம்பவே தரக்குறைவாக பேசியிருந்தார்.

இந்நிலையில் வாட்டாள் நாகராஜின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், “வாட்டாள் நாகராஜ் என்கிற கன்னட வெறியன் ரஜினி பற்றி தாறுமாறாக இஷ்டத்துக்கு பேசியிருக்கிறார். அவரும் ரஜினிகாந்த் பிறந்த மாநிலத்தில்தான் பிறந்திருக்கிறார். ரஜினிக்கு அங்கு சொத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அங்குதான் இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் வாட்டாள் நாகராஜோ ரஜினியை கர்நாடக மாநிலத்துக்குள் விடமாட்டோம் என பேசியிருக்கிறார். காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சூழலில் எவ்வளவோ தில்லுமுல்லு செய்து பார்த்தார்கள். ஆனால் காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதை அங்கிருப்பவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் வாடாள் நாகராஜ் ரஜினிகாந்த் குறித்து தடித்த வார்த்தைகளை பேசியிருக்கிறார்.மேலும் கர்நாடகத்திற்குள் விடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கர்நாடகத்துக்குள் விடமாட்டோம் என சொல்ல நீ யாருடா.. நீ தமிழ்நாட்டுக்கு வந்து பாரு அப்போ ரஜினி யாருனு தெரியும். இனிமேல் ரஜினி குறித்து பேசினால் வாட்டாள் நாகராஜின் நாக்கை அறுப்போம் என்று ரஜினி ரசிகர்கள் சபதம் எடுத்திருக்கின்றனர்.

- Advertisement -

தம்ழிநாட்டில் முதலமைச்சராகியிருக்க வேண்டியவர் ரஜினிகாந்த். அந்தப் பதவியை அலங்கரித்திருக்க வேண்டிய அவர் அதை தியாகம் செய்து கலைஞர் கருணாநிதியிடம் ஒப்படைத்தவர். அதேபோல் ரோஜாவும் ரஜினியை திட்டுகிறார்.நீங்கள் மட்டும்தான் ரஜினியை திட்டுறீங்க. ஜெகன்மோகன் கட்சியோ இல்லை வேறு மாநில கட்சியினரோ ரஜினியை திட்டுகிறார்களா. இனியும் ரஜினியை ரோஜா திட்டினால் பொறுத்துக்கொள்ளமாட்டோம்”” என கொந்தளித்திருக்கிறார் பயில்வான்.அவரத் இந்தப் பேச்சுக்கு ரஜினியின் ரசிகர்கள் தங்களது வலுவான ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்