கோலிவுட்டின் ஹிட் காம்போவில் ஒன்றாக இருந்தது டி.இமான் – சிவகார்த்திகேயன் காம்போ. சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய ஐந்து படங்களுக்கு இமான் இசையமைத்திருக்கிறார். இவற்றில் சீமராஜாவை தவிர்த்து மற்ற நான்கு படங்களின் பாடல்களும் மெகா ஹிட். சீமராஜா பாடல்களும் ஓரளவு வரவேற்பை பெற்றவைத்தான்.
அதேபோல் சிவகார்த்திகேயன் முதன்முதலில் பாடல் பாட ஆரம்பித்ததும் இமானின் இசையில்தான். இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேரும் இணைந்து பணியாற்றவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அந்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது. இந்த ஜென்மத்தில் அவருடன் நான் இணையமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
அவரின் இந்தப் பேட்டிக்கு பிறகு இமானுக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயனாக இருப்பாரோ என்று பலரும் யூகங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து இமானின் முதல் மனைவி மோனிகா இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனக்கும் இமானுக்கு விவாகரத்து நடக்கக்கூடாது என்றுதான் சிவகார்த்திகேயன் நினைத்தார். இமானின் முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்று பேசினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், “மோனிகாவுடன் டி.இமான் 13 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இமான் மோனிகாவிடம் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இமான் இரண்டாவது திருமணம் செய்தபோது மோனிகாவும் வாய் திறக்கவில்லை.
ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன் இமான் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு மார்க்கெட் குறைந்துவிட்டதால் இப்படி பேசுகிறாரோ என்பதும் தெரியவில்லை. கமலும் கௌதமியும் சேர்ந்து வாழ்ந்தார்கள். கௌதமிக்கு கமல் பல உதவிகளை செய்தார். ஆனால் திடீரென ஒரு நாள் கௌதமி, என்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமலை பிரிகிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார். இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கூட்டி கழித்த்ப்பாருங்கள் புரியும்.
இமான் வைத்த குற்றச்சாட்டு குறித்து சிவகார்த்திகேயன் மௌனமாக இருக்கக்கூடாது. ஏதாவது சொன்னால்தான் இதன் உண்மை பிரச்னை என்னவென்று தெரியவரும். எனவே சிவகார்த்திகேயன் வாய் திறந்துதான் ஆக வேண்டும்” என்றார்.





