சிவகார்த்திகேயன் நடித்த “மாவீரன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி மிகவும் கலகலப்பாக செல்கிறது எனவும் இரண்டாம் பாதி சற்று ஏமாற்றத்தை தருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் “மாவீரன்” திரைப்படத்தை குறித்த விமர்சனத்தை ஒரு வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதில் பேசிய அவர், “ஏற்கனவே மாவீரன் என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆனால் அத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் ஏனோ மாவீரன் என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “மாவீரன் படத்தின் கதை மிகவும் சாதாரண கதையாக இருக்கிறது. வெறும் உப்புச்சப்பு இல்லாத கதையை எழுதியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். முதல் பாதியில் சிவகார்த்திகேயன் மேலே பார்த்து பார்த்து அசரீரி குரலை கேட்டுவிட்டு பேசுவதெல்லாம் மீண்டும் மீண்டும் வருகிறது. அது கொஞ்சம் தொய்வாகத்தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன் அடிக்கடி அசரீரி பேச்சைக் கேட்டுத்தான் பேசுகிறார் என்பது நம்முடைய பொறுமையை சோதிக்கிறது.

சிவகார்த்திகேயன் முந்தைய படத்தில் பிரின்ஸ் என்று பெயர் வைத்தார். அந்த படம் சுமாராக போனது. சீமராஜா என்ற படத்தை சொந்தமாக எடுத்தார். கையில் இருந்த பல கோடிகளை இழந்து கடனாளி ஆனார் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் மனதில் பதிகிறது. மொத்தத்தில் மாவிரன் படத்தை ஒரு முறை பார்க்கலாம்” என்றும் அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.





