- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து வெற்றி... பா ரஞ்சித் பட்டறையில் மணிகண்டன்... கோலிவுட்டில் படு பிஸியாகும் நடிகர்...

அடுத்தடுத்து வெற்றி… பா ரஞ்சித் பட்டறையில் மணிகண்டன்… கோலிவுட்டில் படு பிஸியாகும் நடிகர்…

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர் பா ரஞ்சித். இவர் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார். தற்போது விக்ரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.

இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்ல, மாரி செல்வராஜின் முதல் திரைப்படம் ஆன பரியேறும் பெருமாள், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழேயே உருவாகியது.

- Advertisement -

சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தையும், நீலம் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படியான சூழலில், அடுத்ததாக மணிகண்டன் பா ரஞ்சித் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கவனிக்கத்தக்க படங்களில் மணிகண்டன் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த அவர், காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு விக்ரம் வேதா திரைப்படத்தில் நடிப்பு மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் செயல்பட்டார் மணிகண்டன். இதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அத்தனையும் கவனத்தை ஈர்த்தன.

- Advertisement -

குறிப்பாக ஜெய் பீம் திரைப்படத்தில், இருளர் சமுதாய இளைஞராகவே வாழ்ந்து பாராட்டைப் பெற்றார் மணிகண்டன். இதனை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருக்கும் லவ்வர் திரைப்படமும் சுமாரான வெற்றியை பெற்றிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்திருப்பதால், பலரும் கவனம் பெறும் நடிகராக மணிகண்டன் உருவெடுத்து இருக்கிறார். இப்படியான சூழலில் அவர் பா ரஞ்சித் தயாரிப்பில் நடித்திருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -

சற்று முன்