நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி உள்ளார். கமலுடன் திரிஷா சிம்பு அசோக் செல்வன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தக்லைஃப் படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்குனராக அறிமுகமாகும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கு தற்காலிகமாக கமல் 237 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாகும். கமலை மட்டுமே மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இதில் கதாநாயகி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் சமீபத்தில்தான் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று 90 நாட்கள் ஏஐ தொழில்நுட்பம் பயிற்சி பெற்று திரும்பியிருக்கிறார். அதனால் சண்டை காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பங்களை கமல் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன் தக்லைஃப் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசிய கமல், ஏஐ தொழில் நுட்பம் நம்மை விட பெரியது. அதை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல் பயன்படுத்த கூடாது. நான் இப்போதைக்கு அதை பயன்படுத்த மாட்டேன் என்றுதான் கூறியிருக்கிறார். அதனால் ஏஐ தொழில்நுட்பம் இந்த படத்தில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி உள்ளது.
தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதுவரை கமல்ஹாசன் அந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள இருக்கிறார். கமலுடன் மணிரத்னம் திரிஷா சிம்பு ஆகியோரும் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதனால் தக்லைஃப் படம் ரிலீஸான பிறகுதான் கமல்ஹாசன் அன்பறிவ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
வருகிற ஜூன் 12ம் தேதி கமல் 237 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தை 45 நாட்களுக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதால், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் கச்சிதமாக திட்டமிட்டு சண்டை காட்சிகளை எடுத்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது, இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்தான் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





