- Advertisement -
Homeபொழுதுபோக்கு30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற இயக்குனர் மணிரத்னம், நடிகை மனிஷா கொய்ராலா...

30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற இயக்குனர் மணிரத்னம், நடிகை மனிஷா கொய்ராலா – நெகிழ்ச்சியில் சொன்ன வார்த்தைகள்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் நடிகர் அரவிந்த் சாமி மனிஷா கொய்ராலா நாசர் கிட்டி உள்ளிட்டோர் நடித்த படம் பம்பாய். கடந்த 1993ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இந்து மதத்தை சேர்ந்த அரவிந்த் சாமியும், முஸ்லிம் பெண் மனிஷா கொய்ராலும் காதலிப்பார்கள். அதில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு என்ற பாடல் காட்சி கேரளாவில் உள்ள பேக்கல் கோட்டை பகுதியில் எடுக்கப்பட்டது.

கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியில் அரபி கடலோரத்தில் பேக்கல் கோட்டை அமைந்துள்ளது. இது காசர்கோட்டையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்திலேயே மிகப்பெரிய கோட்டை பேக்கில் கோட்டை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் பம்பாய் படம் வெளியாகி ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பேக்கல் கோட்டை பகுதிக்கு பம்பாய் படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னம், அந்த படத்தின் நாயகி மனிஷா கொய்ராலா மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஆகியோர் சமீபத்தில் சென்றனர்.
அந்த இடத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது நடிகை மனிஷா கொய்ராலா கூறியதாவது, பம்பாய் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த இடத்தில் ஒரு அழகான மிகச்சிறந்த பாடலை நாங்கள் படமாக்கினோம். இந்த லொக்கேஷனை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சியாக கூறினார்.

- Advertisement -

அடுத்து அவருக்கு அருகில் இருந்த இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, இங்கு மீண்டும் வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அன்று பார்த்த பல இடங்களை இப்போது என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் அந்த உணர்வும் நெகிழ்ச்சியும் அப்படியே தான் இருக்கின்றன.

பம்பாய் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கூறியதாவது, இந்த படம் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பதற்கு காரணம் பேக்கல் கோட்டையின் இந்த இடமும் அந்த பாடலின் இசையும் படத்தில் நீங்கள் காணும் அந்த அழகான உணர்வுகளும்தான் என்று கூறியிருக்கிறார். இந்த பேக்கல் கோட்டை கேரளாவின் சுற்றுலா தலங்களின் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்