- Advertisement -
Homeபொழுதுபோக்குசிக்ஸ் பேக் குறித்து பேசிய நடிகர் யோகிபாபு… அவர் கிண்டலாக சொன்னது நடிகர் சூரியை...

சிக்ஸ் பேக் குறித்து பேசிய நடிகர் யோகிபாபு… அவர் கிண்டலாக சொன்னது நடிகர் சூரியை தானோ? விவகாரத்தை இப்படி கௌப்பி விடறாங்களே…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஹீரோக்கள் சிலர் வில்லன்களாக மாறி நடிக்கின்றனர். அதே போல் வில்லன் நடிகர்கள் சிலர் ஹீரோக்களாக மாறிவிட்டனர். இந்த வரிசையில் இயக்குனர்கள் ஹீரோ ஆவதை போல காமெடி நடிகர்களும் ஹீரோவாக மாறி வருகின்றனர். அவர்களது படங்களுக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைக்கிறது.

அப்படி சமீபத்தில் ஹீரோவாக மாறி பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் சூரி. பல படங்களில் காமெடி ரோலில் நடித்த சூரி விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் ஹீரோவாக நடித்தார். சிறிதும் பிசிறின்றி நேர்த்தியான அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டிய நிலையில் தொடர்ந்து அவர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் பயணத்தை தொடர்கிறது.

- Advertisement -

விடுதலை படத்தை தொடர்ந்து கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களில் நடித்த சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் பல மாதங்களாக கடலில் நடக்கும் கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னயில் சமீபத்தில் சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டு கால சாதனைகளை கொண்டாடும் விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ஆர்யா யோகி பாபு மற்றும் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் உள்பட ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் யோகி பாபு பேசிய போது குறுக்கிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர், நீங்கள் கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்க? சிக்ஸ் பேக் ட்ரை பண்றீங்களோ என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன நடிகர் யோகி பாபு, சிரிப்பு காட்டற நமக்கு எதுக்குப்பா சிக்ஸ் பேக் எல்லாம்? கிடைக்கிற வாய்ப்பை வைத்து காலத்தை தள்ளிட்டு அப்படியே போயிடலாம். அப்பப்போ சூட்டிங் ஸ்பாட்டில் விளையாடுவோம், அவ்வளவுதான் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், சேப்பாக்கம் கிரிக்கெட்டுக்காக முயற்சி பண்ணி இருக்கேன். சிஎஸ்கே மேட்ச் விளையாடினா முதல் கமாண்டாராக நான் போவேன். அங்க வெளியே நின்னுருக்கேன். உழைப்புதான் எல்லாமே என்றும் நடிகர் யோகி பாபு கூறினார். இதில் அவர் சிரிப்பு காட்டற நமக்கு எதுக்கு சிக்ஸ் பேக் என்று பேசியது நடிகர் சூரி, சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் காட்டி ஒரு காட்சியில் நடித்து இருந்தார். அதை தான் யோகிபாபு கலாய்த்தாரா என்று ரசிகர்கள் இணையத்தில் விவாதிக்க துவங்கியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்