- Advertisement -
Homeபொழுதுபோக்குநேற்று அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார், அந்த விஷயத்தையும் இனி கவனிப்பாரா? - இதென்னப்பா புது...

நேற்று அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார், அந்த விஷயத்தையும் இனி கவனிப்பாரா? – இதென்னப்பா புது பஞ்சாயத்து?

- Advertisement -

கடந்தாண்டில் பொங்கல் அன்று அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு இயக்குனர் எச் வினோத் இயக்கிய 3வது படம் இது. இதற்கு பின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் அஜீத்குமார் நடித்த நிலையில், அந்த 2 படங்களுமே இன்னும் திரைக்கு வரவில்லை.

துணிவு படத்துக்கு பிறகு விஜய் நடித்த லியோ, தி கோட் என 2 படங்கள் வெளியான நிலையில், அஜீத்குமார் படம் எதுவுமின்றி ஏகே ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்தனர். தற்போது வருகிற பொங்கலுக்கு 2025ம் ஆண்டில் ஜனவரி 10ம் தேதி, விடாமுயற்சி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, பொது இடங்களில் சினிமா நிகழ்ச்சிகளில் கடவுளே அஜீத்தே என்ற வார்த்தைகள் டிரண்டிங் ஆக பயன்படுத்தப்பட்டு, வைரலாகி வருகிறது. அஜீத்குமார் தனக்கு ரசிகர் மன்றங்களும் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டமும் வேண்டாம் என பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்தவர்.

அதனால் அஜீத்குமாரை பொருத்த வரை, நல்ல படங்களை ரசிகர்களுக்கு தர வேண்டும். அவர்கள் தன்னுடைய படங்களை தியேட்டரில் ரசிப்பதுடன் அவர்கள் தங்களது குடும்பம், வாழ்க்கையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் இப்படி பொது இடங்களில் கடவுளே, அஜீத்தே என கூச்சலிடுவது அவரை பலத்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார், பொது இடங்களில் இதுபோன்று என் பெயரை சொல்லி இப்படி கோஷம் போடுவதை கட்டாயமாக ரசிகர்கள் தவிர்க்க வேண்டும். இதை நான் விரும்பவில்லை. அநாகரீகமாக தேவையின்றி இப்படி கோஷமிடுவதால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதை கட்டாயம் தவிர்த்துவிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்தின் டீசரின் முடிவில், கடவுளே அஜீத்தே என்று குறிப்பிடும் விதமான ஒரு பிஜிஎம் இசை ஒலிப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. படத்துக்கு இசையமைத்த அனிருத் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். எனவே, ரசிகர்களுக்கு அறிவுரை செய்த நடிகர் அஜீத்குமார், விடாமுயற்சி டீசரில் வந்த அந்த பிஜிஎம் இசையை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்