தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல், இன்று 70 வயதிலும் நாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சொந்தமாக படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக அவரது படங்களையும் தயாரிப்பாளர். பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் கமல் தயாரிப்பது வழக்கம். கடந்தாண்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் அமரன், மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் அமரன் படம் 325 கோடி ரூபாய் வசூலித்து, கடந்தாண்டில் தமிழில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த 2வது படமாக இருந்தது. முதல் படம் விஜய் நடித்த தி கோட் படம் ரூ. 445 கோடி வசூலித்து முதலிடம் பெற்றது.
அமரன் படம் 100 நாட்கள் ஓடிய நிலையில் அந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி நடிகர் கமல்ஹாசன் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் நாயகி சாய்பல்லவி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் அமரன் படம் 100 நாள் வெற்றிவிழாவில் பங்கேற்ற மீடியா மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமரன் படத்தின் வெற்றிக்கு இந்த படத்தை பாராட்டியும் புகழ்ந்தும் எழுதி தள்ளிய மீடியாக்களை வெற்றி விழாவில் அனுமதிக்க மறுத்திருப்பது கமல் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இதுவரை நடிகர் கமல்ஹாசன் இப்படி மீடியாக்களை புறக்கணித்தது இல்லை. கேமராவுடன் செய்தியாளர்கள் விழாவுக்கு வராவிட்டாலும் அங்குள்ள பார்வையாளர் யாரேனும் செல்போனில் படம் பிடித்து இந்த விழாவை இணையத்தில் விட மாட்டார்களா, மீடியாக்களின் ஆதரவு இன்றி அமரன் படம் இந்த பெரிய வெற்றியை பெறவில்லை என்பதை அமரன் படக்குழு நன்றி இல்லாமல் மறந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.





