- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கமல்ஹாசன் - விஜய் சேதுபதிக்கு இடையிலான 6 வித்தியாசங்கள் - ஒரே...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கமல்ஹாசன் – விஜய் சேதுபதிக்கு இடையிலான 6 வித்தியாசங்கள் – ஒரே வாரத்தில் கண்டுபிடித்து அசத்திய பார்வையாளர்கள் – அட அசத்தறாங்கப்பா!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 6ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கியது. 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, 7 ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது 8ம் ஆண்டில் நடந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இப்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பங்கேற்று, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அளவுக்கு, விஜய் சேதுபதியால் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவ்வளவு சிறப்பாக நடத்த முடியாது. அவர் போல பேசவும் முடியாது என்ற ஒரு கருத்து பரவலாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி, சிறப்பாக தனது தொகுப்பாளர் பணியை செய்வதாக பார்வையாளர் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார்.

- Advertisement -

இன்னும் சமூக வலைதளங்களில் பலர், விஜய் சேதுபதிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் உள்ள 6 வித்தியாசங்கள் குறித்து பட்டியலிட்டு வருகின்றனர். இது வார பத்திரிகையில் வரும் 6 வித்தியாசங்கள் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமலுக்கும் விஜய் சேதுபதிக்கும் உள்ள 6 வித்தியாசங்கள் என்ற தலைப்பில் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில், கமல் எப்போதும் பேசினாலும் தனது வார்த்தைகளில் தற்பெருமை கலந்து பேசுவார். அவரது பேச்சில் தற்பெருமை நிறைய இருக்கும். ஆனால் விஜய்சேதுபதி எந்தவிதமான தற்பெருமையும் இல்லாமல் யதார்த்தமாக பேசுகிறார். இரண்டாவது, கமல் யாருடைய மனதையும் நோகாமல் பேசுவதில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் விஜய் சேதுபதி மனதில் பட்டதை வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்று நறுக் தெறித்தது போல் வெளிப்படையாக பேசுகிறார்.

- Advertisement -

மூன்றாவதாக கமல், பிக்பாஸ் வீட்டுக்குள் தவறு செய்த நபரை அழுத்தமாக சுட்டிக்காட்ட மாட்டார். மேம்போக்காக சொல்லிவிட்டு போய்விடுவார். ஆனால் விஜய் சேதுபதி, தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவரிடமே நேரடியாக தவறை சுட்டிக்காட்டி பேசுகிறார். நான்காவது, கமல் நிகழ்ச்சிக்கு வரும்போது கைதட்டலுக்காகவே சில விஷயங்களை பேசுவது போல் இருக்கும். அதுவும் குறிப்பாக அரசியல் சார்ந்த விஷயங்களை கமல் பூடகமாக பேசி கைதட்டல் வாங்குவார்.

ஆனால் விஜய் சேதுபதியின் வெளிப்படையான பேச்சும் கைதட்டலை பெற வைக்கிறது. ஐந்தாவதாக கமல், போட்டியாளர்களை நேரடியாக தாக்கி பேசுவது எல்லாம் அத்தி பூத்தது போல் ஏதாவது ஒரு நாளில், ஒரு போட்டியாளர் மீதுதான் நடக்கும். ஆனால் விஜய் சேதுபதி எந்த போட்டியாளரையும் பாரபட்சம் பார்க்காமல் முகத்துக்கு நேராகவே கண்டித்து பேசுவதை வழக்கமாக செய்கிறார். ஆறாவதாக கமல் தெளிவுபடுத்தாத இந்த விளையாட்டை, நடிகர் விஜய் சேதுபதி முதல் வாரத்திலேயே புரிய வைத்து விட்டார் என்று ஆறு வித்தியாசங்களை குறிப்பிட்டு அந்த பதிவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்