- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு ரூபாய் கூலி… பித்தலாட்டக்காரி ஜூலி? விஜய் குறித்து விமர்சித்த பிக்பாஸ் ஜூலியை சமூக வலைதளங்களில்...

ஒரு ரூபாய் கூலி… பித்தலாட்டக்காரி ஜூலி? விஜய் குறித்து விமர்சித்த பிக்பாஸ் ஜூலியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று மதியம் வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடந்த தவெக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அடங்காத சீறிவந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்றை ஒரு சிறுவன் புல்லுக்கட்டை காட்டி அமைதிப்படுத்தியதாக ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார்.

அதை மையமாக வைத்து பிக்பாஸ் ஜூலி நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நீ பாட்டுக்கு போற போக்குல இப்படி எல்லாம் பேசாதே அண்ணே. உங்க கட்சி மைனர் பசங்க புல்லுகட்டு எடுத்துகிட்டு காளை கிட்ட போயிட போறாங்க. அப்புறம் 50 சாவு 500 என்று மாறிடும். கொஞ்சம் பார்த்து பேசுண்ணே என்று எகத்தாளமாக பேசி கலாய்த்து இருந்தார்.

- Advertisement -

அந்த வீடியோ வைரலான நிலையில் அதைப் பார்த்து கொந்தளித்துப் போன தளபதி ரசிகர்கள் ரசிகைகள் மற்றும் தவெக கட்சி சார்ந்தவர்கள் இப்போது பிக்பாஸ் ஜூலியை இணையத்தில் அடித்து துவைத்து காயப்போட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் வெளியிட்ட வீடியோவில், நீங்க ஜல்லிக்கட்டில் போராடியவர் என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

ஜல்லிக்கட்டு என்று யாராவது பேசினால் போதும், உடனே சூனியம் வைக்கின்ற ஜண்டா பொம்மை மாதிரி வந்துடறீங்க. நீங்கள் ஜூலி இல்லை. ஒரு ரூபாய் கூலி. அதாவது ஒரு அந்த மனுஷன் அரசியல் ரீதியாக ஜல்லிக்கட்டு காளையை உதாரணமாக சொன்னால் அதை உதாரணமாக விட்டுவிட வேண்டும்.

- Advertisement -

உடனே ஜல்லிக்கட்டில் நான்தான் போராடிய வீர மங்கை என்று சொல்லிக்கொண்டு ஆட்டோ ஏறி வந்து அடி வாங்கக்கூடாது. வீர மங்கை என நினைத்து பேசியதால் உங்களை வீங்க வீங்க அடிக்கப் போறானுங்க என்று கூறியிருக்கிறார். மற்றொரு ரசிகை வெளியிட்ட வீடியோவில், பித்தலாட்டக்காரி ஜூலி. விஜய் அண்ணா வேலூரில் பேசியதை வைத்து பேசியிருக்கிறார் ஜூலி. ஏதாவது ஜூலி தெளிவாக பேசி இருக்கிறாரா?

கட்சியில் இருப்பவர்கள் பாதிப்பேர் மைனரா இல்லை மேஜரா என்பது தேர்தலில் தெரியவரும். நீங்க ஏன் இப்போது கதறுகிறீர்கள். ஒழுக்கமாக வார்த்தையை விடுங்கள். பிக்பாஸிலேயே உங்களுக்கு பித்தலாட்டக்காரி என்ற பெயர் வைத்தாகி விட்டது. அங்கே சுத்தி இங்கே சுத்தி இப்ப விஜய் அண்ணாவிடம் வந்துடுவீங்களா? அவர் கால் தூசிக்கு நீங்க வருவீங்களா என்று கேள்வி எழுப்பியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்