- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது ஸ்ரீதேவியியை நான் கொன்றேனா?.. போனி கபூர் கண்ணீருடன் விளக்கம்.. ஒருவழியாக வாயை திறந்தார்

என்னது ஸ்ரீதேவியியை நான் கொன்றேனா?.. போனி கபூர் கண்ணீருடன் விளக்கம்.. ஒருவழியாக வாயை திறந்தார்

- Advertisement -

சிவகாசியை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீதேவி. கந்தன் கருணை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பல படங்களில் நடித்தார். அதனையடுத்து ஹீரோயினாக மூன்று முடிச்சு படத்தின் மூலம் உள்ளே எண்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை ஃபேமஸ்.

இரண்டு படங்களும் மெகா ஹிட்டானதை அடுத்து தமிழின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். அதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தார். குறிப்பாக பாலிவுட்டில் தமிழ் கலைஞர்கள் சாதிப்பது கஷ்டம் என்பதை உடைத்துக்காட்டி தன்னுடைய கால்ஷீட்டுக்காக பாலிவுட்டை காத்திருக்க வைத்தார். அந்த சமயத்தில் போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிகபூருக்கு ஸ்ரீதேவியுடன் நடந்தது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு குஷி, ஜான்வி என்ற மகள்கள் இருக்கிறார்கள். கடைசியாக அவர் ஹிந்தியில் மாம் படத்திலும் தமிழில் புலி படத்திலும் நடித்திருந்தார். ஒரு திருமண நிகழ்ச்சிகாக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்த அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமின் பாத்ரூமில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடல் தேசிய கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரிடம் இருந்த பணத்தை பறிப்பதற்காகத்தான் கொலை செய்யப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. மேலும் இதற்கு போனிகபூரேகூட காரணமாக இருக்கலாம் என்றுகூட ஒரு சிலர் கூற ஆரம்பித்தனர். ஆனால் அதுகுறித்து போனி கபூர் எதுவும் வாய் திறக்கவில்லை. இந்த சூழலில் முதன்முறையாக வாய் திறந்திருக்கிறார் போனி கபூர்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், “என் காதல் மனைவியை நானே கொன்றுவிட்டேன் என்றெல்லாம் பலரும் பேசினர். அதுதொடர்பாக எதுவுமே பேச வேண்டாம் என்றுதான் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்தேன். ஏனெனில் இதே கேள்வியை துபாய் காவல் துறையினர் 48 மணி நேரம் நீங்கள் கொன்றீர்களா என கேள்வி கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

உண்மை கண்டறியும் சோதனையையும் நடத்தினார்கள். அப்போது எனது மனம் பட்ட வேதனையை நான் மட்டும்தான் அறிவேன். அந்த ரிசல்ட் வந்த பிறகுதான் இது கொலை அல்ல எதிர்பாராத விபத்து என்று முடிவு செய்தார்கள். பிறகு அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனுமதித்தார்கள். அவர் அப்படி மயங்கி விழ காரணம் அவர் தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக பல வேளைகள் உணவை உண்ணாமல் தவிர்த்துவிடுவார். குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறது எனவே உணவை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் அவர் மதிக்கவில்லை. அதன் காரணமாக பல முறை வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறார்” என்றார்.

சற்று முன்