- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தமுறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு, பிக்பாஸ் சீசன் 8 பிரமோ வீடியோ வெளியீடு, முதலில்...

இந்தமுறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு, பிக்பாஸ் சீசன் 8 பிரமோ வீடியோ வெளியீடு, முதலில் பம்முவாங்க, கடைசியில் எகிறுவாங்க – விஜய் சேதுபதிக்கு அட்வைஸ்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு வரை பிக்பாஸ் 7 சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்தமுறை, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்ட நிலையில், நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கமலுக்கு பதிலாக வரும் விஜய் சேதுபதி, அவர் அளவுக்கு பேசுவாரா என்ற சந்தேகத்தில் பார்வையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று, பிக்பாஸ் சீசன் 8க்கான பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் பொதுஜனங்கள் மத்தியில் செல்லும் விஜய் சேதுபதிக்கு அவர்கள் அட்வைஸ் சொல்வது போல, இந்த பிரமோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல தரப்பு மக்களும் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் குறித்து அட்வைஸ் செய்கின்றனர்.

- Advertisement -

சூப்பர் சார் பர்பெக்டா ரெடி ஆயிட்டீங்க என, பிக்பாஸ் கோட்சூட் தைத்து தந்த டெய்லர் சந்தோஷமாக சொல்வதுடன் வீடியோ துவங்குகிறது. காரில் பயணிக்கும் விஜய் சேதுபதியிடம், உண்மையா ரெடியாகணும்னா, கார்வலம் போனா போதாது, ஊர்வலம் போகணும் என்று கார் டிரைவர் சொல்கிறார். அடுத்து பார்க்கில் ஒருவர், இதப் பாருங்க சேது, குரூப்பிசம் பண்றவங்க, டாமினேட் பண்றவங்களை எல்லாம் ஓட விடணும், என்கிறார்.

அடுத்து காய்கறி மார்க்கெட் ஒன்றில் பெண்மணி ஒருவர், என்ன தம்பி பார்க்கறீங்க, காய்கறியில் பார்த்தாலே நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியும், ஆனா மனுஷங்களில் அது தெரியாது என்கிறார். அங்கிள், தப்பா ஆடுனா எப்போ எந்த கார்டு கொடுக்கணுமுன்னு தெரியுமில்ல என்று விளையாடும் ஒரு சிறுவன் விஜய் சேதுபதியை பார்த்து கேட்கிறான்.

- Advertisement -

பஸ்சில் பயணிக்கும் போது விஜய் சேதுபதி ஒரு பெண்ணுக்கு எழுந்து சீட்டு விட்டுத்தர, அருகில் உள்ள இளைஞர் ப்ரோ, இந்த இளகின மனசு எல்லாம் 12பி ல ஓகே, ஆனா பிபி ல வேணாம் என்கிறார். தம்பி ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவாங்க, வாழைக்கா பஜ்ஜி மாதிரி வளவளன்னு இல்லாம, மிளகா பஜ்ஜி மாதிரி சுருக்குன்னு பேசுவாங்க.

வீக் எண்டு டேஸ்ல ஒண்ணுமே தெரியாம மாதிரி பம்முவாங்க, வீக் டேஸ்ல எகிறுவாங்க, உஷாரா இருங்க சார் என்று விஜய் சேதுபதிக்கு டச்சப் செய்யும் பையனும் அட்வைஸ் தருகிறார். இறுதியில் உங்கள் விருப்பமான பிக்பாஸை நெருக்கமாக கொண்டு வர, ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என வித்யாசமாக சிரித்து பிரமோ வீடியோவில் அசத்தி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

- Advertisement -

சற்று முன்