லியோ திரைப்படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான வேலையில் நீண்ட கால அவகாசத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் லியோ படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அப்போதே படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் சூறாவளியாய் சுழன்று படத்தை எடுத்து வந்தார் லோகேஷ் கனகராஜ். சொன்ன தேதியில் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால், அவசர அவசரமாக அவர் லியோவை எடுத்தார். போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற, படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது.
லோகேஷ் கனகராஜ் படம் எந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகிறதோ, அந்த அளவுக்கு அவரின் படம் குறித்த இன்ட்ரோ வீடியோ மிகப்பெரிய அளவில் பேசப்படும். இதை விக்ரம் திரைப்படத்திலிருந்து அவர் வழக்கமாக்கி வருகிறார். நிச்சயமாக விக்ரம் திரைப்படத்தின் இன்றோ வீடியோவை இப்போது கூட ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.
அரசியல்வாதிகள் காவலர்கள் என அனைவரும் முகமூடி அணிந்தபடி கமல்ஹாசனை தவிர, அவர் அனைவருக்கும் அசைவ விருந்து அளித்து ஆரம்பிக்கலாமா என்று கேட்பார். ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, லியோ படத்தின் ஓபனிங் வீடியோவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதில் வரும் ஆங்கில பாடல் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். அதில் ப்ளடி ஸ்வீட் என்று கூறி இருப்பார் விஜய். இந்த வீடியோவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படியான சூழலில் அவர் ரஜினிகாந்த் உடன் அடுத்து இணைந்திருக்கும் திரைப்படத்திற்கான இன்ட்ரோ வீடியோவும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது. இது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் அனிருத் இசை என்பதால் இதிலும் ஆங்கில பாடல் ஏதும் இருக்குமா என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வீடியோவுக்கான சூட்டிங் சன் டிவி அலுவலகத்தில் தான் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீடியோ விற்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரஜினி படத்திற்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்ப, இதற்கான பதில் ஏப்ரல் 22ஆம் தேதி தெரிந்துவிடும்.





