- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? வெளியான லேட்டஸ்ட்...

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் தெரிஞ்சுக்கலாமா?

- Advertisement -

விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய இந்த நிகழ்ச்சி, இந்த 2025ம் ஆண்டில் 9வது சீசனாக ஒளிபரப்பாக உள்ளது. 7 ஆண்டுகள் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்தாண்டில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். மேலும் நிறைய படங்களில் நடிக்கவும் அவர் கமிட் ஆகியிருக்கிறார். தவிர கடந்தாண்டில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெற 3 மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி விட்டார். இந்த காரணங்களால் அவர் கடந்தாண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

ஆனால் இந்த முறை நடிகர் கமல் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்த நிலையில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதும் நடிகர் விஜய் சேதுபதிதான் என்பது உறுதியாகி விட்டது. நடிகர் கமல்ஹாசன் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என்பதும் உறுதியாகி உள்ளது.

ஏனெனில் நடிகர் கமல்ஹாசன் இப்போது ராஜ்ய சபா எம்பி ஆகி விட்டார். அடுத்து அவர் படங்களில் நடிக்கவும் கால்ஷீட் ஒதுக்க வேண்டியுள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் பிரசார பணியும் அவருக்கு இருப்பதால் இனி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதிதான் நிரந்தர தொகுப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதில் பிரபல டிவி சீரியல் நடிகர்கள் நடிகைகள் விளம்பர மாடல்கள் மட்டுமின்றி இந்த முறையும் சமூக வலைதளங்களில் பிரபலமான செலிபரட்டிகளும் பொதுமக்களில் சிலரையும் களத்தில் இறக்கிவிட பிக்பாஸ் திட்டமிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என சிலர் பட்டியல் வெளியிட்டாலும் அவை உறுதிப்படுத்தாத தகவலாக உள்ளது. சிலர் யூகமாகவும் கூறுவதால் இன்னும் அதிகாரபூர்வமான இறுதிபட்டியல் தயாராகவில்லை என்பதே உண்மை. வித்யாசமான டாஸ்க், பிக்பாஸ் வீட்டுக்குள் செய்யப்படும் அதிரடி மாற்றம் என இந்த முறை அதிரடி காட்ட பிக்பாஸ் தயாராகி வருகிறார். விஜய் சேதுபதியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை தனது நண்பர்களிடம் கேட்டு வருகிறார்.

- Advertisement -

சற்று முன்