நடிகர் கமல்ஹாசன், இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கிறார். சினிமா பணிகளோடு அரசியல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆரம்பம் முதலே வீட்டுக்குள் பரபரப்பாக போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை தந்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சிக்கு வாராவாரம் டிஆர்பி ரேட்டிங் கூடி வருகிறது.
பிக்பாஸ் வீட்டை பொருத்த வரை, மனிதர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளும், கருத்து மோதல்களும், அவர்களுக்குள் ஏற்படும் சுயத்தன்மை குறித்த போராட்டங்களுமே இங்கு பிரதானப்படுத்தப்படுகின்றன. துவக்கத்தில் டாஸ்க்குகள் வழியாக நிகழ்ச்சி விறுவிறுப்பானது. இப்போது மனிதர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளே விவாதப் பொருளாக அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன.
பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் 15, 20 போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், டாஸ்க் குகள் நடத்தப்பட்ட போது, அது நிகழ்ச்சியை பார்க்க சுவாரசியமாக இருந்தது. இப்போது வேண்டாத விஷயங்களுக்காக சண்டை போடும் இவர்களை பார்த்தால், அது டிவி சீரியல்களில் சினிமா படங்களில், வீடுகளில் நடக்கும் விஷயங்களை போல தான் இருக்கிறது என பலரும் புலம்புகின்றனர்.
இந்த சீசன் 7 ஐ பொருத்த வரை, பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு பிக்பாஸ் வீடு, ஸ்மால் வீடு இரு குழுக்களாக போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வீட்டில் இருந்த பிரதீப் ஆண்டனி என்ற போட்டியாளர், கடந்த வாரம் ரெட்கார்டு கொடுத்து வெளியேறறப்பட்டது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் நிகழ்ச்சியை நடத்தும் கமல் மீதான விமர்சனமும் அதிகமாக உள்ளது.
கடந்த பிக்பாஸ் சீசனில் வீட்டுக்குள் பலவிதமான பிரச்னைகள், அடாவடிகளை செய்த போட்டியாளர் அசீம், டைட்டில் வின்னர் ஆனார். அதை சுட்டிக் காட்டுவது போல, கடந்த சீசனை போல இந்த சீசனிலும் நடந்துக்கொண்டால் வெற்றி பெறலாம் என வீட்டுக்குள் உள்ள யாரும் நினைத்து விடக் கூடாது. அதே போன்ற விளையாட்டை இப்போதும் ஆடினால் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்க கூடாது. ஏன் ஓட்டு போட்டார்கள் என, அவர்களுக்கே தெரியாது என கமல் பேசி இருந்தார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அசீம், எனக்கு டைட்டில் வின்னர் பட்டத்தை விஜய் டிவியோ, கமல் சாரோ கொடுக்கவில்லை. மக்கள் தான் ஓட்டுப் போட்டு என்னை வெற்றி பெற வைத்தனர். மக்கள் தந்த ஆதரவால் கிடைத்த அந்த வெற்றியை கமல் சார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது ஓட்டுப் போட்ட மக்கைள அவர் உதாசீனப்படுத்துகிறார் என்றுதான் அர்த்தம், என கோபமாக கூறி இருக்கிறார் அசீம். தேர்லை கமல் எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், ஓட்டு போட்ட மக்களை கமல் அவமதிக்கிறார் என்ற அசீம் கருத்து, வைரலாகி வருகிறது.





