நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் ராஷி கண்ணா, அதர்வாவுக்கு காதலியாக அறிமுகமானார். இந்த படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அனுராக் காஷ்யப் வில்லன் நடிப்பு ரசிகர்களை அசத்தியது.
துவக்கத்தில் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ராஷி கண்ணா, தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அடங்க மறு, அயோக்யா, சங்கத் தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்திலும் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்போது இந்தியில் த சபர்மதி ரிப்போர்ட், தெலுங்கில் தெலுசுகடா ஆகிய படங்களில் ராஷி கண்ணா நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. நல்ல சிவந்த நிறத்தில் கட்டழகான தோற்றத்தில் உயரமான அழகியாக இருக்கும் ராஷி கண்ணாவுக்கு பட வாய்ப்புகள் தமிழ், தெலுங்கு, இந்தி என வருகின்றன.
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில், டாக்டர் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் கடைசி பாடல் காட்சியில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் கிளாமரில் போட்டி போட்டுக்கொண்டு நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி விட்டனர். கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் தயார் என்ற வகையில், இருவரது நடனக் காட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை மனம் விட்டு வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், எனக்கு மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பலமுறை வெளிப்படையாக தெரிவித்து விட்டேன். எங்களுடைய காம்போ மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதே போல் நடிகர் பிரபாஸ் உடன் நடிக்கவும் நான் மிகவும் ஆசைப்படுகிறேன். மகேஷ்பாபுவுடனும், பிரபாஸ் உடனும் நடிக்க வேண்டும் ஆசையில் நீண்ட நாட்களாக இருக்கிறேன். அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகை ராஷி கண்ணா. பிரபலமான முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தால், இன்னும் பெரிய அளவில் இமேஜ் கிடைக்கும், சம்பளமும் பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு போடுகிறாரா ராஷி கண்ணா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





