- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர், 14 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தமிழுக்கு வருகிறார்...

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர், 14 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தமிழுக்கு வருகிறார் – அந்த பிரபல நடிகையின் கணவரா இவர்?

- Advertisement -

சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளியான படம் அயலான். இன்று நேற்று நாளை பட டைரக்டர் ரவிக்குமார் டைரக்ட் செய்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அயலான் படத்தில் ஏலியன் பொம்மை நடித்திருந்த நிலையில், அந்த கேரக்டரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள பட டைரக்டர் மற்றும் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் தவறிவிட்டனர். இன்னும் சிறப்பாக அந்த ஏலியன் கேரக்டரை பயன்படுத்தி இருக்கலாம் என்று பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், அயலான் படம் சுமாராக மட்டுமே ஓடியது.

இதைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகன் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அமரன் படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முதலில் வேலூரில் பிரபல கல்லூரியில் நடந்தது. இப்போது புதுச்சேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடந்து வருகிறது. இந்த எஸ்கே 23 படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் திட்டமிட்டார். ஏனெனில் இப்போது பிற மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள், தமிழ் படங்களில் நடிப்பது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி செராப், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அந்த பாணியில், எஸ்கே 23 படத்தில் ஒரு மலையாள நடிகர் நடிப்பார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் சுரேஷ்கோபியும் துப்பாக்கி படத்தில் நடிகர் ஜெயராம் நடித்த நிலையில், எஸ்கே 23 படத்திலும் சுரேஷ்கோபி அல்லது ஜெயராம் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக முதல் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கால்ஷீட் கிடைக்காத நிலையில் மலையாள பிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து பிஜூமேனன் கூறுகையில், நான் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறேன். இது ஒரு பெரிய கதை. இந்த படத்தில் நடிக்க அதிக நாட்கள் தேதி கொடுத்துள்ளேன். இப்போதைக்கு என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இந்த படம் முழுவதும் என் பாத்திரம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் 14 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த போர்க்களம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன் பழனி படத்தில் குஷ்புவின் கணவராக நடித்திருந்தார். தென்காசி பட்டணம் படத்தில் நடித்த மலையாள நடிகை சம்யுக்தாவின் கணவர் பிஜூ மேனன் என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சற்று முன்