- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட அஜித்? ஆனால் மாட்டிக்கிட்டதோ விஜய், இப்படி எல்லாம் நடந்திருக்கா?

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட அஜித்? ஆனால் மாட்டிக்கிட்டதோ விஜய், இப்படி எல்லாம் நடந்திருக்கா?

- Advertisement -

சமீப நாட்களாகவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இரு ரசிகர்களுக்கும் இடையே யார் சூப்பர் ஸ்டார் என்று களேபரமே நடந்துகொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது விஜய்க்குத்தான் ஆசை இருக்கிறது என்பது போலும் அஜித் எந்த பட்டத்திற்கும் ஆசைப்படாதவர் என்றும் ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, அந்த பிம்பத்தை சற்று உடைத்துள்ளார்.

அஜித், அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பல ஆண்டுகளாக தாங்கிக்கொண்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பின் தன்னை தல என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் கூறினார். இதனால் அஜித் எந்த சுய தம்பட்டத்தையும் விரும்பாதவர் என்ற பார்வை எழுந்தது. ஆனால் பத்திரிக்கையாளர் பிஸ்மி வேறு விதமாக கூறுகிறார்.

“சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது அஜித்திற்கு ஆசை இல்லாமல் இருந்ததில்லை. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டவர் அஜித்தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “அஜித் அந்த காலத்தில் பல பேட்டிகளில் சர்ச்சையாக பேசிவிடுவார். யாரை பற்றி கேள்வி கேட்டாலும் வாயில் வந்ததை பேசுவார். அதிகமாக லூஸ் டாக் எல்லாம் விடுவார். விஜய்க்கும் அஜித்துக்கு போட்டி வந்ததற்கு காரணமே அஜித்தான். மிகவும் ஓப்பனாக பேசிவிடுவார்” என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டியால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

சற்று முன்