தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் இளைய மகன். மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஜித்தன், ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஜீவா அளவுக்கு நடிப்பில் ரசிகர்களை அவர் கவரவில்லை.
நடிக்க வந்த ஆரம்பத்தில் காதல் படங்களில் அதிகமாக நடித்த ஜீவா, ஒரு கட்டத்துக்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்தார். ஜீவா சிவா மனசுல சக்தி, டிஸ்யூம், தெனாவெட்டு, ரௌத்திரம், கோ, நண்பன், சிங்கம் புலி உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றி படங்களாக அவருக்கு அமைந்தன.
சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது.இந்த படத்துக்கு பிறகு சிவா மனசுல சக்தி 2ம் பாகத்தை ஜீவா நாயகனாக நடிக்க எம் ராஜேஷ் இயக்கு உள்ளார். முதல் பாகத்தில் ஜீவாவுடன் நடித்த சந்தானம் கேரக்டரில், 2ம் பாகத்தில் யோகி பாபு நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 11ம் தேதி பிளாக் என்ற திகில் படம் வெளியானது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். புதிய குடியிருப்புக்கு வசிக்க வரும் ஜீவா, பிரியா பவானி ஷங்கர் தம்பதிக்கு அந்த வீட்டில் இரவில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. கோஹரண்டா என்ற ஹாலிவுட் திரில் படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளாக் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2 படத்தை தொடர்ந்து, இந்த படமும் பிரியா பவானி ஷங்கருக்கும் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் ராசி இல்லாத நடிகை. அவர் நடித்தால் படம் வெற்றி பெறாது என்ற தவறான சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் நிலவிய நிலையில், டிமான்டி காலனி 2 படம் அபார வெற்றி பெற்றது. இப்போது 2வது முறையாக பிளாக் படமும் பெரிய வெற்றியை பெற்றிருப்பது, அந்த சென்டிமென்டை பிரியா பவானி ஷங்கர் அடித்து நொறுக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் ஜீவாவுக்கு பிளாக் படம் ஒரு கம்பேக் படமாக அமைந்து, அவருக்கு அடுத்தடுத்த பல வாய்ப்புகளை பெற்று தரும் அளவுக்கு இந்த படத்தின் வசூல் இருந்து வருகிறது. கடந்த 11ம் தேதி பிளாக் படம் ரிலீஸ் ஆன நிலையில், 12 நாட்களில் 9.6 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பிளாக் படம் திரையிட்ட தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருவதால், பிளாக் படம் இன்னும் பல கோடிகளை வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





