- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டரில் சக்கைப் போடு போட்ட ஆக்சன் கிங் அர்ஜூன் படம் - ஓடிடியில் பிளாஸ்ட்...

தியேட்டரில் சக்கைப் போடு போட்ட ஆக்சன் கிங் அர்ஜூன் படம் – ஓடிடியில் பிளாஸ்ட் ரிலீஸ் எப்போது? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

- Advertisement -

சில நேரங்களில் சத்தமே இல்லாமல் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் தான் எப்போதும் ஜெயிக்கும். இந்த வரிசையில் பெரிய வெற்றியை பெற்ற படம் பிளாஸ்ட்.

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் நடிகைகள் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த படம் பிளாஸ்ட். ஆக்சன் திரைக்கதையில் உருவான இந்த படம் கடந்த மாதம் மே 28ம் தேதி திரைக்கு வந்தது. 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமான வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

- Advertisement -

பிளாஸ்ட் படத்துக்கு ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். பிளாஸ்ட் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அர்ஜூனுக்கு நீண்ட காலமாக பெரிய வெற்றிப் படம் எதுவும் இல்லாத நிலையில் பிளாஸ்ட் படம் ஒரு சூப்பர் காம்பேக் தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக இந்த பிளாஸ்டிக் படம் சாதனை படைத்துள்ளது. அது மட்டும் இன்றி தமிழ்நாடு தியேட்டர்களில் வசூலை குவித்த இந்த படம் கேரளாவிலும் பாக்ஸ் ஆபிஸில் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா நடித்த கருப்பு படத்துக்கு இணையான வசூலை கடந்துள்ளது.

- Advertisement -

பெரிய பட்ஜெட் படங்கள் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் நிலையில் 100 கோடி ரூபாய் பட்டியலில் இணைவதே பெரிய போராட்டமாக உள்ள நிலையில் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்படும் படங்கள் 70 கோடி 80 கோடி ரூபாய் வசூலை அள்ளுவதே உண்மையான வெற்றியாக தமிழ் சினிமாவில் கருதப்படுகிறது. அதனால் பிளாஸ்ட் மாஸ் ஹிட் படமாக உள்ளது.

இந்நிலையில் பிளாஸ்ட் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது ஓடிடி தளத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 25ம் தேதி பிளாஸ்ட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

- Advertisement -

சற்று முன்