- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய நஷ்டத்தை தந்த பிளடி பெக்கர் படம், தயாரிப்பாளர் நெல்சனிடம் முறையிட்ட வினியோகஸ்தர் - நேரில்...

பெரிய நஷ்டத்தை தந்த பிளடி பெக்கர் படம், தயாரிப்பாளர் நெல்சனிடம் முறையிட்ட வினியோகஸ்தர் – நேரில் நெல்சன் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அவரது இயக்கத்தில் அடுத்து வெளியான டாக்டர் படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கினார். அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாஸ் ஹிட் வெற்றியை கொடுத்தது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்த இந்த படத்தை 2ம் பாகமாக தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடி முடிவு செய்தது.

இதுவரை 170 படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் 2வது பாகம் என்று எந்த படத்திலும் நடித்தது இல்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டதால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதித்தார். கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஜெயிலர் 2 படப்பிடிப்ப துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குனராக மட்டுமின்றி நெல்சன் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் திரைக்கு வந்தது. இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வினியோகம் உரிமம் பெற்ற ஒரு வினியோகஸ்தர் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் நெல்சனை அழைத்து போனில் பேசியுள்ளார். நேரில் அவரை சந்தித்துள்ளார். அப்போது தனக்கு பிளடி பெக்கர் படத்தால் ரூ. 8 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஏரியா வாரியாக கணக்குகளை சொல்லியுள்ளார்.

இதையடுத்து மொத்தமாக எவ்வளவு நஷ்டம் என்று கேட்ட தயாரிப்பாளர் நெல்சன், ரூ. 8 கோடியை உடனே கொடுத்துள்ளார். திக்குமுக்காடி போன வினியோகஸ்தர், அவ்வளவு வேண்டாம், ரூ. 5 கோடி மட்டும் போதும் என்று கூறியும், பரவாயில்லை ரூ. 8 கோடியே வாங்கிக்கொள்ளுங்கள் என்று தந்து திக்முக்காட வைத்திருக்கிறார். ஜெயிலர் 2 படம் ரிலீஸாகும்போது பிளடி பெக்கர் பஞ்சாயத்து வரக்கூடாது என்று நெல்சன் கருதியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்